அதிரையில் செயல்படும் பெரும்பாலான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்பு ஆகியவற்றில் முக்கிய பொறுப்பு வகித்து சமூக பணியாற்றி வருவது. ஏழை எளியோருக்கு வாழ்வாதார உதவிகளை அவ்வப்போது செய்து வருவது உள்ளிட்ட பணிக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை விழாவிற்கு தலைமையேற்ற சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹாஜி A.J. அப்துல் ரஜாக் அவர்களால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
சிறந்த சமூக சேவை விருது பெற்ற S.A. அப்துல் ஹமீது அவர்களை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் வாழ்த்தினர்.
சிறந்த சமூக சேவை விருது தகுதியானவர்களுக்குத் தருவது சாதரண வேலையல்ல. அத்தகு மனிதர்களை இனம் காட்டுவது பத்திரிகைத் துறைக்கு கடமை என்றால் மிகையில்லை. நல்ல மனிதர் ஹாஜி S.A. அப்துல் ஹமீது அவர்கள் அத்தகைய விருதை பெறுவதில் அனைவருக்கும் மகிழ்வே.
ReplyDelete