.

Pages

Tuesday, May 26, 2015

அண்ணா சிங்காரவேலுக்கு சிறந்த பேச்சாளர் விருது !

அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்களை இனங்கண்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் 'அதிரை நியூஸ் கல்வி விருது - சாதனையாளர்கள் விருது 2015' என்ற பெயரில் விருது வழங்கும் விழா நேற்று மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று உரையாடி வருகிறார். இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் பேச்சரங்க நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல்வேறு தரப்பின் வரவேற்பை பெற்று வருகிறார். பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் அழைப்பின்பேரில் நேரடியாக சந்தித்து பாராட்டைப் பெற்றுள்ளார். மேலும் 'நதியோர மரவேர்கள்', 'சிறகு முளைக்காமலே', 'இந்தப்பகலும் விடியட்டும்' போன்ற நூல்களை எழுதியுள்ள பணிகளுக்காக அண்ணா சிங்காரவேலுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் குணசீலன் வழங்கி கெளரவித்தார்.

சிறந்த பேச்சாளர் விருது பெற்ற அண்ணா சிங்காரவேலுவை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

2 comments:

  1. அருமை நண்பர் சிங்கார வேலுக்கு ஒரு விசில் போடுங்க.

    ReplyDelete
  2. நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.