அதிரையில் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை, தனது நோயாளிகளின் உயர் சிகிச்சைக்காக சரியான மருத்துவரை பரிந்துரைத்து அனுப்பி வைப்பது. மேலும் அவர்களிடமிருந்து சலுகை கட்டணத்தில் சிகிச்சை அளிக்க பரிந்துரைப்பது. ஏழைகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருவது. அவசர சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு அளிக்கப்படும் குளோரபார்ம் பணிக்காக நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி வருவது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக தொலை தூரங்களில் காணப்படும் மருத்துவமனைகளுக்கு சென்று வந்தனர். இந்த குறையை போக்கும் விதமாக மருத்துவர்கள் பாலகிருஷ்ணன், மருதுதுரை, கெளசல்யா ஆகியரோடு இணைந்து தஞ்சையில் 'தஞ்சை கேன்சர் செண்டர்’ என்ற பெயரில் டிரஸ்ட் அமைத்து புற்று நோயால் பாதிக்கபட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக புதிய மருத்துவமனையை கட்டி அதில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை வழங்கி வருகிறார். இதில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் டாக்டர் H. அப்துல் ஹக்கீம் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இந்த அறிய பணிக்காக டாக்டர் H. அப்துல் ஹக்கீம் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இவற்றை மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் D. மீனாட்சி வழங்கி கெளரவித்தார்.
சிறந்த மருத்துவ சேவை விருது பெற்ற டாக்டர் H. அப்துல் ஹக்கீம் அவர்களை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் வாழ்த்தினர்.
விருது பெற்றது மிக்க சந்தோசம். தங்கள் மருத்துவ சேவை தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅதிரை நியூஸ் வழங்கிய விருதுகளிலே சரியான தேர்வு சிறந்த மருத்துவ சேவை விருதிற்கான தேர்வு மருத்துவர் ஹக்கீம் அவர்கள் ஏழைகளுக்கு சதி மதம் பாராமல், தெரு பாகுபாடு பாராமல் வெளியில் தெரியாமல் ,விளம்பரம் தேடாமல் மருத்துவ சேவை செய்துள்ளார் . அவரிடம் சிகிச்சை பெற்ற ஏழை மக்கள் என்னிடம் பல பேர் சொல்லி உள்ளனர் .......டாக்டர் ஹக்கீம் சார் அவர்களே உங்கள் மருத்துவ சேவை பனி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeletecongradulation
அதிரை நியூஸ் வழங்கிய விருதுகளிலே சரியான தேர்வு சிறந்த மருத்துவ சேவை விருதிற்கான தேர்வு ....மருத்துவர் ஹக்கீம் அவர்கள் ஏழைகளுக்கு சாதி மதம் பாராமல், தெரு பாகுபாடு பாராமல் வெளியில் தெரியாமல் ,விளம்பரம் தேடாமல் மருத்துவ சேவை செய்துள்ளார் . அவரிடம் சிகிச்சை பெற்ற ஏழை மக்கள் என்னிடம் பல பேர் சொல்லி உள்ளனர் .......டாக்டர் ஹக்கீம் சார் அவர்களே உங்கள் மருத்துவ சேவை பனி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteசரியானநபருக்குசரியானவிருது.டாக்டர்தொண்டுதொடரவாழ்த்துக்கள்
ReplyDeleteசிறந்த தேர்வு. அதிரையின் மிகச் சிறந்த மருத்துவர். டாக்டர் அப்துல் ஹக்கீம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteமிகச் சிறந்த தேர்வு டாக்டர் அப்துல் ஹக்கீம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அதிரையின் மிகச் சிறந்த மருத்துவர்
ReplyDelete