பேச்சுவார்த்தை முடிவின் படி, அதிரை அரசு மருத்துவமனையில் இதுவரையில் இரவு நேர மருத்துவர் நியமிக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ். ஹெச் அஸ்லம் தலைமையில், மருத்துவமனை வளாகத்தில் நாளை [ 16-05-2015 ] காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவது தொடர்பாக கடந்த அன்று அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் தலைமையில் அதிரை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சிறப்பு கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் காலதாமதமாகி வரும் நியாமான கோரிக்கை வெற்றிபெற அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் நாளை நடைபெற உள்ள ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அழைப்பு விடுத்துள்ளார்.
All they best
ReplyDeleteஆநரவு அளிப்பவர்களுக்கு ஒரு கேள்வி இவ்வளவு செய்கின்ற சேர்மன் அதே அரசு மருத்துவமனைக்குச் செல்லும் ஈச்ஆர் முதல் மருத்துவமனை வரை உள்ள சாலையை சரி செய்தாரா?
ReplyDelete