தமிழக அரசின் உயர்கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி பல்கலைகழக ஆசிரியர் சங்கம், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி கிளை சார்பில் கல்லூரி வாயில் முன்பாக முழக்கப்போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முழக்கப்போராட்டத்திற்கு பல்கலை கழக ஆசிரியர் சங்க அதிராம்பட்டினம் தலைவர் எஸ். ராஜா முகமது தலைமை வகித்தார். செயலாளர் கே. முருகானந்தம், பொருளாளர் அல் ஹாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்கலைகழக பேரவை மற்றும் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிடும் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் அரசின் முன்அனுமதி பெற வேண்டும் என தமிழக அரசின் உயர்கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணையை கண்டித்தும், இவற்றை திரும்ப பெற கோரியும், இதுநாள் வரை உள்ள நடைமுறையை பின்பற்ற வலியுறுத்தி முழக்கப்போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் சங்க உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசு உதவி பெரும் கல்லூரி ஆசிரியரல்லாப் பணியாளர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.







தமிழக அரசின் உயர்கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணையை திரும்ப பெற கோரி பல்கலைகழக ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். என்னவகையான அரசாணை பிறப்பித்துள்ளது., அதனை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் ரிசைன் பண்ணிட்டு வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். அதிகமாக கட்டணம் வசூலிக்கிறார்களே அதற்க்கு ஏதாவது போராட்டம் உண்டா? தூய்மை இந்தியா திட்டம் என்று சொல்லி விழா நடத்தினார்கள் கல்லூரி சுற்றி அவ்வளவு சுத்தம் ....???
ReplyDelete