.

Pages

Saturday, August 20, 2016

விபத்திலிருந்து தப்பியது கத்தார் ஏர்லைன்ஸ் !

அதிரை நியூஸ்:
துபாய், ஆகஸ்ட் 20
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விபத்தை தொடர்ந்து சமீப நாட்களில் பல அரபு நாட்டு விமானங்கள் ஆபத்துகளில் சிக்கி இறையருளால் பாதுகாப்பாய் மீண்டு வருகின்றன. அப்படியொரு நிகழ்வு பயணிகள் சேவையில் சிறந்து விளங்கும் உலகின் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்திற்கும் ஏற்பட்டது.

கடந்த வியாழன் அன்று துருக்கியின் இஸ்தான்புல் அத்தாதுர்க் விமான நிலையத்திலிருந்து கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்ட கத்தார் QR240 விமானத்தில் பறவை ஒன்று மோதியதால் எஞ்சினில் தீ ஏற்பட உடனடியாக மீண்டும் இஸ்தான்புல் விமான நிலையத்திலேயே பத்திரமாக தரை இறக்கப்பட்டது என கத்தார் ஏர்லைன்ஸ் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.