தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை சார்பில் வறண்டு காணப்படும் பகுதிகளுக்கு மழை பெய்ய வேண்டி, அதிரை ஈசிஆர் சாலை பிலால் நகர் கிராணி மைதானத்தில் சிறப்புத் தொழுகை செவ்வாய்கிழமை காலை 7 மணியளவில் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலப் பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தெளஸி கலந்துகொண்டு சிறப்புத் தொழுகையை நடத்தினார். இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். வறட்சிப் பகுதிகளில் தாமதமின்றி மழை பொழிய வேண்டும், ஆடு, மாடு உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கு பயன்தரும் மழையைப் பொழியவும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பிரார்த்தனையில் கலந்துகொண்ட ஆண்கள் அனைவரும் தாங்கள் அணிந்து இருந்த சட்டையை திருப்பி அணிந்துகொண்டு, இரு கைகளின் புறங்கைகளை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.












மழை வேண்டி தொழுது விட்டு அப்படியே இருந்து விடாமல் மழையை வரவைப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்
ReplyDeleteநமது ஊரில் அதிகமான மரங்களை நடுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்
நாம் முயற்சி செய்து விட்டு அல்லாஹுவிடம் உதவி கேட்டால் நிச்சியமாக அல்லாஹுவின் உதவி நமக்கு கிடைக்கும்