![]() |
| கோப்புப்படம் |
தஞ்சை மாவட்டம், அதிரை பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் ( AFFA ) நடத்தும் 14 ஆம் ஆண்டு மாநில அளவிலான தலை சிறந்த அணிகள் பங்கு பெரும் மாபெரும் எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி நாளை வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில், அதிரை ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி விளையாட்டு மைதானத்தில் தொடங்க உள்ளது.
நாளைய முதல்நாள் ஆட்டத்தில் பிளாக் பிரண்ட்ஸ் கோட்டையூர் அணியினரோடு, புதுக்கோட்டை கால்பந்துகழகம் புதுக்கோட்டை அணியினர் மோத இருக்கின்றனர். இந்த தொடர் போட்டியில் தமிழகத்தில் தலை சிறந்த பல்வேறு அணிகள் கலந்துகொண்டு விளையாட இருக்கின்றனர்.
நாளை நடைபெற உள்ள முதல்நாள் ஆட்டத்தை சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு துவக்கி வைக்க உள்ளனர். மேலும் வின்னர், ரன்னர் பரிசுகள், தொடரில் சாதனை நிகழ்த்தும் சிறந்த வீரர்களுக்கு சிறப்புப் பரிசுகள் ஆகியவற்றை வழங்க பல்வேறு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
நாளை நடைபெறும் முதல்நாள் ஆட்டத்தைக் காண அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி விளையாட்டு பிரியர்கள் - ஆர்வலர்கள் - இளைஞர்கள் திரளாக கலந்துகொள்ள AFFA நிர்வாகம் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

கலந்துக்கொள்ளும் அனைத்து அணிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்
ReplyDelete-----மறத்தமிழன்