.

Pages

Monday, June 26, 2017

அதிரையில் 1300 பயனாளிகளுக்கு 6500 கிலோ பித்ரா அரிசி விநியோகம் !

அதிராம்பட்டினம், ஜூன் 26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சார்பில் ஏழை, எளிய, நலிவடைந்த பொதுமக்கள் பயனுறும் வகையில் வட்டியில்லா நகைக் கடன் வழங்கும் திட்டம், கைவிடப்பட்ட முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கான மாதாந்திர பென்ஷன் உதவித் தொகை, ஏழைக்குமர்களுக்கு திருமண நிதி உதவி, வறிய  மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவி ஆகியன அதிரை பைத்துல்மால் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, புனிதமிகு ரமலான் பண்டிகையையொட்டி, அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த நலிவடைந்த ஏழை, எளிய குடும்பங்களுக்கு பித்ரா அரிசி விநியோகிக்கப்பட்டது. இதில் கணவனால் கைவிடப்பட்டோர், விதவை, முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 1300 ஏழை குடும்பங்களுக்கு 6500 கிலோ பித்ரா அரிசியை அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் பர்கத், செயலாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முஹம்மது முகைதீன் உள்ளிட்ட அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள், மஹல்லா நிர்வாகிகள் விநியோகித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.