.

Pages

Tuesday, June 13, 2017

அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளின் கனிவான வேண்டுகோள் ( வீடியோ )

அதிராம்பட்டினம், ஜூன் 13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின்
சார்பில் ஏழை, எளிய, நலிவடைந்த உள்ளூர் பொதுமக்கள் பயனுறும் வகையில் வட்டியில்லா நகைக் கடன் வழங்கும் திட்டம், ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கான பென்ஷன் வழங்கும் திட்டம், ஏழைக்குமர்களுக்கான திருமண நிதி உதவி வழங்கும் திட்டம், ஏழை மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை, சிறுதொழில் தொடங்க வட்டியில்லாத கடனுதவி, மருத்துவ உதவி, சிறுவர்களுக்கு ஹத்னா செய்தல், ஆம்புலன்ஸ் வசதி, ஆண்டுதோறும் ஃபித்ரா அரிசி விநியோகம், தையல் இயந்திரங்கள், கிரைண்டர் வழங்குதல் உள்ளிட்ட சேவைத் திட்டப் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. மேலும் சுய தொழில் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜனாஸா ( இறந்த உடல் ) நல்லடக்கத்திற்கு பயன்படுத்தும்  தரமான மரக்கட்டைகள் குறைந்த கட்டணத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

இத்திட்டங்கள் யாவும் வருடந்தோறும் கிடைக்கப்பெரும் ஜக்காத் நிதி உதவியைக்கொண்டும், கூட்டுகுர்பானி திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதி மற்றும் நன்கொடைகளைக்கொண்டு நடைபெற்று வருகின்றன. ஆகவே, நல்லுள்ளம் படைத்த  அன்புச் சகோதரர்கள் அனைவரும் கடந்த வருடங்களைப்போல் இவ்வருட புனிதமிகு ரமலான் மாதத்தில் தங்களுடைய ஜக்காத் மற்றும் பித்ரா நிதியை அதிரை பைத்துல்மாலுக்கு அதிகமதிகம் வழங்க வேண்டும் என அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் நம்மிடம் கனிவுடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.