தன்னிலே யாரு தகுதியானார் ? - புன்னியம்
கன்னிய மென்றே கழித்திட்டார் காலத்தை
அன்னியம் கொண்டே யகன்று.
அகத்தி லிருக்கிறா யப்பாலும் நீயே !
சுகத்தில் திளைக்கிறார் சோம்பி - இகத்தில்
நகத்தைக் கடிக்கிறார் நாளெல்லாம் வாடி
முகத்தில் செழிப்பும் முடிந்து
முடிவும் முதலும் முதலோனே நீயே !
விடிவு தெரியாதே வீழ்ந்தே - கடிந்தே
துடித்தே மறைதலுக்குத் தோன்றவில்லை நாமும்
பிடிப்பு வறிதலே பேறு
பேறுகள் பெற்றவர் பேரின்பம் கண்டவர்
ஊறுகள் செய்யாரா மொன்றியோர் - மாறுவோர்
மீறுவார் மாண்டபின் மீட்சியில்லை ! தன்னிலே
ஊறுகின்ற வுத்திக்கே நோன்பு
நோன்பு தருமத னுண்மையி லூன்றிட
மாண்பு பெருதலே மானிடம் - பூண்டிட
வேண்டி வகுத்தானே வேந்தன் புரியாதே
போண்டியா யாகிடாதே வுண்டு.
ஷேக் அப்துல்லாஹ் அ.
அதிராம்பட்டினம்.
உடலாலும், உள்ளத்தாலும் பிறருக்கு தீங்கு செய்யவோ, நினைக்கவோ கூடாது. நம் சேமித்த பொருளில் ஒரு பகுதி, ஏழை, எளியோருக்கு தர்மம் செய்வது, நம்மை படைத்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது, இதுவே ஒவ்வொரு மனிதனின் கடமை, ஈத் பித்ர் நல்வாழ்த்துக்கள்
ReplyDelete