.

Pages

Saturday, June 24, 2017

பட்டுக்கோட்டையில் முத்தரையர் சமுதாய மாணவ, மாணவிகளுக்கான கல்வி பரிசளிப்பு விழா !

அதிராம்பட்டினம், ஜூன் 24
சுவரன் மாறன் கல்வி அறக்கட்டளை சார்பில், முத்தரையர் சமுதாய மாணவ, மாணவிகளுக்கான 4 ம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா எதிர்வரும் ( 09-07-2017 ) அன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில் பட்டுக்கோட்டை குட்டால் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இதில் +2 அரசுப்பொதுத்தேர்வில் 1000 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள், SSLC அரசுப்பொதுத்தேர்வில் 450 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் ஆகியோருக்கு சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் ரொக்கப்பரிசு, சிறப்புப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் ஆகியன வழங்கி கெளரவிக்கப்பட உள்ளது.

சாதனை நிகழ்த்திய முத்தரையர் சமுதாய மாணவ, மாணவிகள் கீழ்காணும் அலைப்பேசி எண்களில் வரும் ஜூலை 1 ந் தேதிக்குள் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
9585881680 / 9159486200 / 959707332 / 9150174661 / 9677847381

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.