.

Pages

Tuesday, June 27, 2017

துபாயில் நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள் ( படங்கள் )

அதிரை நியூஸ்: ஜூன் 27
பெருநாள் விடுமுறைக்காக அமீரகம் முழுவதிலிருந்தும் பெரும்பாலான மக்கள் துபைக்கு வருகை தருவர். இவர்களின் சிலர் சொந்த வாகனம் வைத்திருந்தாலும் பெரும்பான்மையோர் அரசு போக்குவரத்தையே நம்பியுள்ளதால் விடுமுறை கழிந்து அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு திரும்பிச் செல்லும் போது மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்படுகிறது.

ஒரு பக்கம் சுள்ளென்ற வெயிலும், பொங்கி வழியும் வியர்வையும் பெரும் சங்கடமாக இருந்தாலும் மக்கள் பொருமையாக நின்று ஏறிச் செல்கின்றனர்.

அபுதாபி, அல் அய்ன், ஷார்ஜா செல்லும் பயணிகளே அதிகம் இப்படி கியூ வரிசையில் நின்று அல்லல்படுகின்றனர்.

இன்னொருபுறம் துபை போக்குவரத்து துறையும் நெரிசலை சமாளிக்க அதிகமான பேருந்துகளை இயக்கி வருகிறது என்றாலும் நமது நாட்டில் இருப்பது போல் முன்பதிவு செய்யும் வசதிகள் இல்லை, முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலேயே பயணிகளுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல் கூடுதல் கட்டணங்கள் வசூலித்தல், சிறப்பு பேருந்துகள் என்ற பெயரில் ஓட்டை உடைசல் பேருந்துகளை இயக்குதல் போன்ற தொல்லைகளும் இங்கு இல்லை.

அதிரை நியூஸ் வாசகர்கள் இங்கு காணும் காட்சிகள் பர்துபை மற்றும் இப்னு பதூதா, அபுதாபி பேருந்து நிலையங்களில் சுட்டது.

அதிரை அமீன்
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.