.

Pages

Wednesday, June 21, 2017

இ-சேவை மையத்தில் ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டை வழங்க ஏற்பாடு !

இ-சேவை மையத்தில் ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டை விரைவில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்தில் பொது மக்கள் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்ட பயன்பாட்டில் இருந்து வரும் குடும்ப அட்டைகளுக்கு பதிலாக புதிய வடிவில் ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 3,26,317 ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் அச்சிட்டு வரப்பெற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை அங்காடிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மீதம் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்படும்.

இது வரை குடும்ப அட்டை பெறாத குடும்பத்தினர்  புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை வேண்டி உரிய ஆவணங்களுடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது வட்ட வழங்கல் அலுவலர்களால் விசாரணை முடிக்கப்பட்டு  ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கான ஒப்புதலினை இணைய தளத்தில் அளித்தவுடன் விண்ணப்பத்தாரின் மொபைல் போனுக்கு. “புதிய அட்டை வெற்றிகரமாக அச்சிடப்பட்டது. தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்” என குறுஞ்செய்தி வரப்பெறும்,  குறுஞ்செய்தி வரப்பெற்ற விண்ணப்பதாரர் மொபைல் போனுடன் வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கி வரும் தமிழ் நாடு அரசு கேபிள் டிவியால் நடத்தப்படும் இ-சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் விவரத்தினை தெரிவிக்க வேண்டும்.

மொபைல் போன் எண்ணை கணினியில் உள்ளீடு செய்த பின்னர் அதே மொபைல் எண்ணிற்கு OTP எனும் 4 இலக்க எண் குறுஞ்செய்தியாக வரப்பெறும். அந்த எண்ணைகணினி இயக்குபவரிடம் தெரிவிக்க வேண்டும், அதன் பின்னர் தங்களுக்கான ஸ்மார்ட் அட்டை அச்சிட்டு வழங்கப்படும்.

ஏற்கனவே இணையதளத்தில் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பம் செய்திருந்து. குறுஞ்செய்தி வரப்பெற்றவர்கள் வட்டாட்சியர் அலுவலத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தினை தொடர்பு கொண்டு புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டையினைப் பெற்று அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழான பலன்களைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது,  இவ்வாறு  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.