.

Pages

Wednesday, June 28, 2017

அதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நல அறக்கட்டளை சார்பில் பெருநாள் அன்பளிப்பு !

அதிராம்பட்டினம், ஜூன் 28
ஈகைத் திருநாளான ரமலான் பெருநாள் பண்டிகை இஸ்லாமியர்களால் தமிழகமெங்கும் கடந்த திங்கட்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி அதிரையில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்க அலுவலகத்தில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிலையில், ரமலான் நோன்பு பெருநாளை முன்னிட்டு நல சங்கத்தில் அங்கம் வகிக்கும் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு கைலிகள், புடவைகள் வழங்கப்பட்டது. மேலும் சங்க பெண் உறுப்பினர் ஒருவருக்கு வாழ்வாதார நிதி உதவி செவ்வாய்க்கிழமை மாலை அளிக்கப்ப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், நல சங்கத் தலைவர் ஹாஜா ஷெரீப், துணைத் தலைவர் சிராஜுதீன், பொதுச்செயலாளர் நூருல் அமீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் மன்சூர் அகமது, முன்னாள் நிர்வாகிகள் சாகுல் ஹமீது, ஜெஹபர் சாதிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.