.

Pages

Wednesday, June 14, 2017

தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு ( படங்கள் )

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், பரக்கலக்கோட்டை கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (14.06.2017) நடைபெற்றது. இதில் 108 பயனாளிகளுக்கு ரூ.5,68,453 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்.

பின்னர், அதிராம்பட்டினம் அருகே உள்ள தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சுகாதார வளாகத்தை சுத்தமாக வைத்திடவும், நோயாளிகள் அறையில் லைட், மின்விசிறி, தண்ணீர் வசதி போன்ற வசதிகள் உள்ளதா என கேட்டறிந்தார். மேலும், தாய்-சேய் அறை, எக்ஸ்ரே அறை, உள் நோயாளி அறை, ஆகிய இடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார். சுகாதார வளாகத்தினை 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சுத்தம் செய்திட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவிட்டார். சுற்றுச்சுவர் அமைத்திட திட்ட வரைவு தயார் செய்து வழங்கும்படி அறிவுரை வழங்கினார்.

அதனை தொடர்ந்து, பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோப்புகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்து, கோப்புகளை முறையாக பராமரிக்கும்படி அலுவலர்களை அறிவுறுத்தினார். வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தினை பார்வையிட்டு சுகாதாரமாக பராமரிக்கும்படி அறிவுறுத்தினார். அலுவக வளாகம் பின்புறம் பராமரிப்பின்றி இருந்த பழைய கட்டிடத்தினை இடித்திட அலுவலர்களை திட்ட வரைவு தயார் செய்யும்படி அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.