.

Pages

Wednesday, June 14, 2017

கத்தார் மீதான தடையால் ஏற்பட்ட இந்திய விமான போக்குவரத்து பிரச்சனை நீங்கியது !

அதிரை நியூஸ்: ஜூன் 14
கத்தார் நாட்டில் சுமார் 6 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் மீது சக அரபு நாடுகளால் விதிக்கப்பட்ட பல்வேறு தடைகளால் விமான போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்தியா – கத்தார் இடையே இயக்கப்படும் விமானங்கள் மாற்றுப்பாதையாக பாகிஸ்தான் மற்றும் இரானிய வான்வெளியின் வழியாக கத்தாருக்கு இயக்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 50 நிமிடங்கள் கூடுதல் பயணம் நேரமானது.

தென்னிந்தியாவிலிருந்து சுமார் 50 நிமிடங்களும், மும்பையிலிருந்து சுமார் 30 நிமிடங்களும் கூடுதல் நேரமானதால் விமான நிறுவனங்கள் விமான கட்டணங்களை உயர்த்தவும், லாக்கேஜ் அளவை 30ல் இருந்து 20 ஆக குறைக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டன.

இந்நிலையில்,  அமீரக இந்திய தூதரகம் மூலம் அமீரக அரசுக்கு பிரச்சனைகளை எடுத்து சொல்லப்பட்டதன் மூலம் மீண்டும் அமீரக வான்வெளியின் வழியாக இந்திய கத்தாருக்கு இடையே இந்திய விமானங்களை இயக்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளதை தொடர்ந்து தொடர்பான பிரச்சனைகள் நேற்று (செவ்வாய்) காலை முதல் முடிவுக்கு வந்து விமான போக்குவரத்து முன்பு போல் இயல்பாக இயங்குகின்றன.

மேலும், இந்த வான்வெளித் தடை கத்தார் ஏர்லைன்ஸ் மற்றும் கத்தாரில் பதிவு செய்யப்பட்டுள்ள விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும் என அமீரகம் மற்றும் சவுதி தெளிவுபடுத்தியுள்ளதால் இனி பிற நாட்டு விமானங்கள் முன்பு போல் கத்தார் சென்று வர வழி பிறந்துள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.