தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத் அதிராம்பட்டினம் கிளை சார்பில் நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை, அதிரை ஈசிஆர் சாலை, பிலால் நகர் பெட்ரோல் நிலையம் எதிரே உள்ள மைதானத்தில் திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மவ்லவி அப்துல்லா மிஸ்க் கலந்துகொண்டு பெருநாள் பேரூரை நிகழ்த்தினார். ரமலான் சிறப்புத் தொழுகையில் பெண்கள் உட்பட அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதி இஸ்லாமியர்கள் 1500 பேர் கலந்துகொண்டனர்.
நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ஈத் பித்ர் பெருநாளை கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கின்றேன். ஈத் முபாரக்
ReplyDelete