.

Pages

Saturday, June 17, 2017

எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் புதிய செயலருக்கு SDPI / PFI நிர்வாகிகள் வாழ்த்து ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஜூன் 17
அண்மையில் புதிதாக பொறுப்பேற்ற தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் செயலாளர் எஸ்.ஜே. அபுல் ஹசனுக்கு எஸ்.டிபி.ஐ கட்சி / பி.எஃப்.ஐ அமைப்பு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை தமிழ்நாடு வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவலரின் செயல்முறை ஆணையின் படி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த எம். அகமது இப்ராஹீம், கே.அஜ்மல்கான், கே. அகமது ரசூல், என்.அகமது அன்சாரி, எஸ்.ஜே. அபுல் ஹசன், என்.கே ஆஷிக் அகமது, என்.எம் அப்துல் லத்திப் ஆலிம் மன்பஈ, எம்.ஏ முஹம்மது தமீம், எம்.பி முஹம்மது அபூபக்கர் ஆகியோர் அதிராம்பட்டினம் எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் உறுப்பினர்களாக நியமனம் செய்து உத்தரவிடப்பட்டனர். இதையடுத்து தலைவராக என்.அகமது அன்சாரி, செயலாளராக எஸ்.ஜே. அபுல் ஹசன் மற்றும் ஏனைய 7 பேர் உறுப்பினர்களாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை பொறுப்பேற்றனர்.

இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்ற தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் செயலாளர் எஸ்.ஜே. அபுல் ஹசனுக்கு எஸ்.டிபி.ஐ கட்சி / பி.எஃப்.ஐ அமைப்பு நிர்வாகிகள் இன்று சனிக்கிழமை சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் எஸ்.டி.பி.ஐ தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இசட். முஹம்மது இலியாஸ், பி.எஃப்.ஐ அமைப்பு மாவட்டச் செயலாளர் மர்ஜூக், எஸ்.டிபி.ஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் சாகுல் ஹமீது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான், எஸ்.டிபி.ஐ கட்சி அதிரை பேரூர் தலைவர் அஜார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.