.

Pages

Wednesday, June 14, 2017

லண்டன் 24 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து (படங்கள்)

மத்திய லண்டனின் லான்கேஸ்டர் வெஸ்ட் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள கிரென்ஃபெல் டவர் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் பற்றிய தீ மளமளவென கட்டிடம் முழுக்க பரவியதால் குடியிருப்புவாசிகளில் பலர் கட்டிடத்தினுள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

24 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தின் தீ விபத்தில் காயமுற்றோர் கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், விபத்தில் ஆறு பேர் உடல் கருகி உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த சுமார் 50-க்கும் அதிகமானோர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் பிரிட்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை தீபிடித்த கட்டிடம் முழுக்க தீக்கிரையானது. இதுவரை சுமார் 50-க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் மேலும் பலர் கட்டிடத்தினுள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து பிரிட்டன் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘இன்று காலை வடக்கு கென்சிங்கடன் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்', என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: மாலை மலர்
படங்கள்: Dailymail
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.