சவூதி, அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட பெரும்பாலான கிழக்கு ஆசிய நாடுகளில் ஞாயிற்றுக்கிழமை ரமலான் பெருநாள் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 'உலகின் ஒரு இடத்தில் பிறை தென்பட்டால் முழு உலகும் அதைக்கடைப்பிடிக்க வேண்டும்' என்கிற அடிப்படையில் சர்வதேசப்பிறையை பின்பற்றக்கூடியவர்கள் சார்பில், அதிராம்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை ரமலான் பெருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை ( 25-06-2017 ) காலை 7 மணிக்கு எம்.எம்.எஸ் அவென்யூ, சிஎம்பி லேன் ( அம்பேத்கர் நகர் ) பகுதியில் நபி வழியில் ரமலான் பெருநாள் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. இதில் தவ்பீக் கலந்துகொண்டு பெருநாள் பேரூரை மற்றும் சிறப்புத் தொழுகையை நடத்தினார். தொழுகையில் பெண்கள் உட்பட 100 பேர் கலந்துகொண்டனர்.
அல்லாஹ்வின் தூதர் வழியில் அல்லாமல் சர்வதேஷ பிறையின் வழியில்! நன்றி அதிரை நீயூஸ்.
ReplyDeleteSarvadesha pirai'nu solli2 nabi vazhiyam😅😅
ReplyDelete