.

Pages

Monday, June 19, 2017

தஞ்சையில் இந்திய இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல் !

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் இந்திய இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் வருகின்ற 02.08.2017 முதல் 10.08.2017 வரை  நடைபெறவுள்ளது. தகுதியுள்ள இளைஞர்கள் இணையதளத்தில் மட்டுமே  விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 தமிழக மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் (புதுச்சேரி)  மாவட்டங்களை சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை மேலும் தெரிவித்ததாவது; 
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் வருகின்ற 02.08.2017 முதல் 10.08.2017 வரை இந்திய இராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் சோல்ஜர் டெக்னிகல், சோல்ஜர் டெக்னிக்கல் அம்யூனிசன், சோல்ஜர் நர்சிங் அசிஸ்ட்ன்ட், சோல்ஜர் ஜெனரல் ட்யூட்டி, சோல்ஜர் கிளார்க் / ஸ்டோர் கீப்பர், சோல்ஜர் டிரேட்ஸ்மேன் ஆகிய இராணுவப் பணிகளுக்கு ஆள்சேர்ப்பு நடைபெறவுள்ளது.  பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 தமிழக மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் (புதுச்சேரி)  மாவட்டங்களை சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய இராணுவத்தில் பணிபுரிய விரும்பும் தகுதியுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற ஆன்லைன் இணையதள முகவரியில் வருகின்ற 18.06.2017 முதல் 17.07.2017 வரை தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.   ஆன்லைனில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.