தஞ்சாவூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் தஞ்சாவூர் ரயிலடியிலிருந்து உலக குருதி கொடையாளர் தினத்தினை முன்னிட்டு குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை (21.6.2017) இன்று புதன்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியானது ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு காந்திஜி ரோடு வழியாக இராசா மிராசுதார் மருத்துவமனை சென்றடைந்தது. திரளான கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு குருதி கொடை குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும், குருதி கொடை தொடர்பான விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் பேரணியில் கலந்து கொண்டனர்.
முன்னதாக ரயில் நிலையத்தில் அதிக முறை அரசு மருத்துவமனையில் குருதி கொடை கொடுத்த கொடையாளர்களை பாராட்டி சான்றிதழும், உலக ரத்த கொடையாளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டியில் வெற்றி மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கி தெரிவித்ததாவது;
ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 14 ஆம்நாள் உலக குருதி கொடையாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் நோக்கம், இரத்தம் கொடுங்கள், இப்போது கொடுங்கள், அடிக்கடி கொடுங்கள் என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டதாகும். இன்று 18 வயது முதல் 60 வயது வரை எல்லா ஆண்களும், பெண்களும் இரத்த தானம் செய்யலாம். ஒவ்வொரு உடலிலும் தோராயமாக 5 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் இரத்த தானத்தின் போது எடுக்கப்படும் இரத்தம் 350 மில்லி லிட்டர் மட்டுமே. இதனை நம் உடல் அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஈடுசெய்துவிடும். ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்தவுடன் வழக்கம் போல் எந்தவித பயமின்றி அன்றாட வேலைகளை செய்யலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 4 இரத்த வங்கிகள் தலைமை அரசு மருத்துவ மனையிலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் செயல்பட்டு வருகின்றது. இந்த இரத்த வங்கியில் 1350 யூனிட் இரத்தம் சேமித்து வைக்க முடியும். இந்த நான்கு இரத்த வங்கியிலும் இரத்த தானம் முகாம்கள் மற்றும் இரத்த வங்கிகள் மூலம் 8000 யூனிட் பெறப்பட்டு தேவைப்படும் நோயாளிகளுக்கு கடந்த ஒரு வருடத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் 6 தனியார் இரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றது. ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இரத்த தானம் செய்ய முன் வர வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (கலால்) இன்னாசிமுத்து, சுகாதாரத்துணை துணை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணியன், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சொக்கலிங்கம், வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மற்றும் அரசு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.