.

Pages

Wednesday, June 28, 2017

பஸ் மோதி தூக்கி வீசப்பட்டவர் மிகச்சாதாரணமாக எழுந்து சென்ற அதிசயம் (வீடியோ)

அதிரை நியூஸ்: ஜூன் 28
இங்கிலாந்து நாட்டின் ரீடிங் (Reading) எனும் பகுதியில் அமைந்துள்ள கன் ஸ்ட்ரீட் (Gun Street) சாலையில் நடந்து சென்ற சைமன் ஸ்மித் என்ற 53 வயது நபர் மீது தடம் எண் 17 என்கிற எண் கொண்ட மாடி பஸ் (Double Decker Bus) ஒன்று பகிரங்கமாக மோதி சுமார் 6 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறிந்தது என்றாலும் விபத்து ஏற்பட்ட அடுத்த நொடியே அவர் ஒன்றுமே நடைபெறாததைப் போல் மிகச்சாதாரணமாக எழுந்து நடந்து பப் (Pub) என அறியப்படும் மதுபான விடுதிக்கு 'தண்ணியடிக்க' சென்றுள்ளார். (பேசாம இவன் செத்தே போயிருக்கலாம்னு மனசில தோணுதா?)

சிறிய கீறல் காயங்களுடன் தப்பித்த சைமன் ஸ்மித்தை விபத்து ஏற்படுத்திய பஸ் ஓட்டுனர் கீழிறங்கி வந்து நலம் விசாரித்தார். இதுவே இந்த விபத்து இந்தியாவில் நடைபெற்றிருந்தால் அந்த டிரைவரின் நிலை??? உங்கள் கற்பனைக்கே!

6:2. அவன்தான் உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்தான். பிறகு உங்களுக்காக ஒரு வாழ்க்கைத் தவணையை நிர்ணயித்தான். மேலும், அவனிடத்தில் முடிவு செய்யப்பட்ட மற்றொரு தவணையும் உண்டு. ஆனால் நீங்களோ சந்தேகத்தில் உழல்கின்றீர்கள்.
 
6:60. அவனே இரவில் உங்கள் உயிர்களைக் கைப்பற்றுகின்றான். இன்னும் நீங்கள் பகலில் செய்கின்ற செயல்கள் அனைத்தையும் அறிகின்றான். பிறகு மறுநாள் இந்த வாழ்க்கை எனும் செயற்களத்தில் மீண்டும் உங்களை எழுப்புகின்றான்; நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கைத் தவணையை நிறைவு செய்யும் பொருட்டு! இறுதியில் நீங்கள் அவனிடமே செல்ல வேண்டியிருக்கிறது. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பது பற்றி உங்களுக்கு அவன் அறிவித்துவிடுவான்.

10:56. அவனே வாழ்வை அளிக்கின்றான். மேலும், மரணம் அளிப்பவனும் அவனே! மேலும் நீங்கள் அனைவரும் அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!




Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.