தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை சங்க அலுவலக வளாகம் மற்றும் செக்கடிப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
எம்.எஸ் ஷஹல் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு சம்சுல் இஸ்லாம் சங்க முன்னாள் துணைத் தலைவர் எம்.எஸ் சிஹாபுதீன் தலைமை வகித்தார். சம்சுல் இஸ்லாம் சங்க செயலர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் தனது சிறப்புரையில், சங்கத்தின் கடந்த கால வரலாறு, ஆற்ற வேண்டிய பணிகள் மற்றும் ரமலான் சிறப்புகள் குறித்து பேசினார். 'சிஷ்வா' குறித்து அறிமுக உரையை அவ்வமைப்பின் துபாய் பொறுப்பாளர் ஜமாலுதீன் நிகழ்த்தினார்.
தொடக்கத்தில், சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்க செயலர் எம்.எஃப் முஹம்மது சலீம் ஆண்டரிக்கை வாசித்தார். இதில் சங்கம் கடந்த ஓராண்டில் ஆற்றிய சேவை, செயல்பாடுகள் குறித்து பட்டியலிட்டார். முடிவில் மவ்லவி ஹாபிழ் ஏ.எல் ஹாரூன் சிறப்பு துஆ ஓதினார்.
இந்நிகழ்ச்சியில், சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் 600 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அனைவரையும் சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்க நிர்வாகிகள் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.
மாஷா அல்லாஹ் சிறப்பாக நடந்தேரியது இஃப்தார் நிகழ்வு செய்திகளை உடனுக்குடன் தருவதில் அ.நி க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDelete