தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் புதிய நிர்வாகிகள் இன்று வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனர்.
சென்னை தமிழ்நாடு வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவலரின் செயல்முறை ஆணையின் படி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த எம். அகமது இப்ராஹீம், கே.அஜ்மல்கான், கே. அகமது ரசூல், என்.அகமது அன்சாரி, எஸ்.ஜே. அபுல் ஹசன், என்.கே ஆஷிக் அகமது, என்.எம் அப்துல் லத்திப் ஆலிம் மன்பஈ, எம்.ஏ முஹம்மது தமீம், எம்.பி முஹம்மது அபூபக்கர் ஆகியோர் அதிராம்பட்டினம் எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் உறுப்பினர்களாக நியமனம் செய்து உத்தரவிடப்பட்டனர். இதையடுத்து தலைவராக என்.அகமது அன்சாரி, செயலாளராக எஸ்.ஜே. அபுல் ஹசன் மற்றும் ஏனைய 7 பேர் உறுப்பினர்களாக இன்று வியாழக்கிழமை பொறுப்பேற்றனர். இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
அதிராம்பட்டினம் எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் நிர்வாகத்தின் கீழ் அதிராம்பட்டினம் சலாஹிய்யா அரபிக் கல்லூரி, காதிர் முகைதீன் கல்லூரி, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
வாழ்துக்கள்
ReplyDelete