அதிரை நியூஸ்: ஜூன் 14
துபையில் ஜூலை 1 ஆம் தேதி முதல் வாடகை வீடுகளுக்கு புதிதாக செல்வோரின் வாடகை ஒப்பந்தங்கள் மீது 'இஜாரி' (Ejari) எனும் சான்று (Attestation) பெறாதவரை வரை அவர்களுக்கு மின்சாரம், தண்ணீர் சப்ளை செய்யப்படாது என DEWA அறிவித்துள்ளது.
இஜாரி சான்று பெறுவதற்கு, துபை முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட 800 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் உள்ளன. இவர்களிடம் உங்களின் புதிய வீட்டு வாடகை ஒப்பந்தங்களை கொடுத்து துபை நிலத்துறையிடம் (Dubai Land Department) ஆன்லைன் வழியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இஜாரி சான்றை பெற்றுக் கொண்டவுடன் துபை மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆணையத்திடமிருந்து (DEWA) உங்களுடைய ஈமெயில் அல்லது மொபைல் போனுக்கு DEWAவின் ஆன்லைன் சுட்டி இணைப்புடன் வரவேற்பு குறுஞ்செய்தி (SMS) வரும்.
அவ்விணைப்பின் (Link) அல்லது DEWA இணையதளம் அல்லது DEWA ஸ்மார்ட் ஆப் வழியாக உட்சென்று 2 ஆயிரம் திர்ஹம் பாதுகாப்பு வைப்புத் தொகையை (Security Deposit) கட்டிவிட்டால் உங்களுடைய புதிய வாடகை வீட்டிற்கான மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு 24 மணி நேரத்திற்குள் தரப்படும்.
இஜாரி பதிவிற்கு தேவையான ஆவணங்கள்:
1. வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரங்கள்
2. வீட்டு வாடகைதாரரின் பாஸ்போர்ட் மற்றும் ரெசிடென்ஸி விசா
3. வீட்டு வாடகைதாரரின் எமிரேட்ஸ் ஐடி
4. வீட்டு முதலாளியின் பாஸ்போர்ட் நகல்
5. சொத்து மற்றும் வாடகைக்கு விடப்படும் கட்டிடம் குறித்த ஆவணங்களின் நகல்கள்
6. கட்டிட எண் குறித்த விபரங்கள் அல்லது உங்களுக்கு முன் குடியிருந்த வாடகைதாரரின் பழைய பில் நகல்
ஆன்லைன் பதிவுக்கான ஆவணங்கள்:
1. எமிரேட்ஸ் ஐடி
2. மொபைல் எண்
3. ஈமெயில் ஐடி
4. அஞ்சல் பெட்டி எண் மற்றும் எமிரேட் குறித்த விபரங்கள்
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.