பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்ற இணையதள எழுத்தாளர் அதிரை மெய்சா மகன் இமாமுதீன் பள்ளியளவிலும், அதிராம்பட்டினம் அளவிலும் 1148 /1200 மதிப்பெண்கள் பெற்று சாதனை நிகழ்த்தி இருந்தார். இவர் தமிழில் 193, ஆங்கிலத்தில் 167, கம்ப்யூட்டர் சயின்ஸ் 197, எகனாமிக்ஸ் 194, காமர்ஸ் 199, அக்கவுண்டன்ஸி 198 ஆகிய மதிப்பெண்கள் பெற்று, தமிழக அளவில் 'சி' கிரேடு பெற்று சாதனை நிகழ்த்தினார். தற்போது காதிர் முகைதீன் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், இவருக்கு பட்டுக்கோட்டையில் நேற்று வியாழக்கிழமை இரவு நடந்த பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பாராட்டு சான்றிதழ், 2 கிராம் தங்க பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இவர் கடந்த 21-05-2015 அன்று SSLC தேர்வில் 477 / 500 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் இடம் பிடித்து சாதனை நிகழ்த்தினார். இவருக்கு அதிரை நியூஸ் கல்வி- சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் கோ. ராஜசேகரன் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் சிறப்பு பரிசு வழங்கி கெளரவித்தார். மேலும் அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் சிறப்பு பரிசு வழங்கி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
Congrats
ReplyDelete