இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு, தஞ்சாவூர் மாவட்டத்தில்
ஜீலை 2017 மாதம் 1ம் தேதி முதல் 31ம் தேதி முடிய சிறப்பு செயலாக்க பணி நடைபெறவுள்ளது. வரும் 09.07.2017 மற்றும் 23.07.2017 ஆகிய இரண்டு நாட்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (13.06.2017) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்ததாவது;
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜீலை 2017 மாதம் 1ம் தேதி முதல் 31ம் தேதி முடிய சிறப்பு செயலாக்க பணி நடைபெறவுள்ளது. மேலும், 09.07.2017 மற்றும் 23.07.2017 ஆகிய இரண்டு நாட்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் எந்தவொரு தகுதியுடைய வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் விடுபடக்கூடாது என்ற தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி, அனைத்து வாக்காளர்களும் குறிப்பாக 18 வயது (தகுதி ஏற்படுத்தும் நாள் 1.1.2017 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அதாவது 31.12.1998 வரை பிறந்தவர்கள்) முதல் 21 வயதிற்குள் உள்ள இளம் வாக்காளர்களைக் கண்டறிந்து விடுபடாமல் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடைபெறவுள்ள சிறப்பு திட்ட செயலாக்க பணிக்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களையும் (பி.எல்.ஓ) ஜீலை 1 முதல் 31ம் தேதி வரை அவரவர் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான படிவங்களுடன் நேரில் சென்று உரிய படிவங்களை அவர்களுக்கு வழங்கி வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெற்று உடனுக்குடன் கணினியில் பதிவேற்றம் செய்ய தொடர்புடைய வட்டாட்சியர்கள் மூலம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இறந்த வாக்காளர்களின் பெயர் விபரத்தை இறப்பு பதிவேட்டினை ஆய்வு செய்து அவர்களது உறவினர்களிடமிருந்து படிவம் 7ஐ பெற்று இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஸ்தல விசாரணை (Field Verification )க்கு பின்னர் அனைத்து பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட படிவங்கள் மீதும் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஒப்புதல் ஆணை (Pass Order) பணிகளை (Disposal of forms through ERO net only) உடனுக்குடன் செயல்படுத்தி 31.07.2017க்குள் தொய்வின்றி பணி நடைபெற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்து அவர்களின் பெயர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
வாக்குச்சாவடி முகவர்களை சிறப்பு முகாம் நடைபெற உள்ள நாட்களான 09.07.2017 மற்றும் 23.07.2017 ஆகிய இரண்டு நாட்களிலும் தொடர்புடைய வாக்குச்சாவடிகளில் இருந்து வரையறுக்கப்பட்ட அலுவலர்களுடன் (DLO) இணைந்து பணியாற்றி ஒத்துழைப்பு அளித்திட பணிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்திய தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ள புதிய படிவங்கள் எண் 6, 7, 8, 8ஏ ஆகியவற்றை அரசு அச்சகத்திலிருந்து பெற்று அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜூலை 2017 மாதம் நடைபெறவுள்ள சிறப்பு பணி குறித்த விபரத்தினை துண்டு பிரசுரம் மூலம் மற்றும் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் ப்ளக்ஸ் அறிவிப்பு பலகை நிறுவுதல் ஆகியவற்றின் மூலம் விளம்பரம் செய்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர்புடைய வட்டாட்சியர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு, வரும் ஜீலை மாதம் முழுவதும் விடுபட்ட வாக்காளர்களை குறிப்பாக 18 வயது முதல் 21 வயது இளம் வாக்காளர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், இறந்த வாக்காளர்களை பட்டியலிலிருந்து நீக்கிடவும் சிறப்பு திட்ட செயலாக்க பணி நடைபெறவுள்ளது.
மேற்படி சிறப்பு திட்ட செயலாக்க பணி (Special Drive ) தஞ்சாவூர் மாவட்டத்தில் செவ்வனே நடைபெற அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க, பா.ஜ.க., காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.