.

Pages

Wednesday, June 28, 2017

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி !

தஞ்சாவூர் மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் கலால் துறையின் சார்பில் தஞ்சாவூர் ரயிலடியிலிருந்து சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று புதன்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியானது ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக  அரண்மனை வளாகம் சென்றடைந்தது. திரளான கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும், போதைப்பொருள் உட்கொள்வதால் மன ரீதியான பாதிப்புகள் குறித்த பதாகைகள் ஏந்தியும், போதைப்பொருள்  தொடர்பான விழிப்புணர்வு  கோஷங்களை எழுப்பியும், பேரணியில் கலந்து கொண்டனர்.

இப்பேரணியில் அவர் லேடி நர்சிங் கல்லூரி, மன்னர் சரபோஜி கலைக்கல்லூரி, அரசினர் தொழிற்பயிற்சி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த 500க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு காவல் படையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன், உதவி ஆணையர் (கலால்) இன்னாசிமுத்து, வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மற்றும் ரெட் கிராஸ் சங்க பிரதிநிதிகள், யூத் ரெட் கிராஸ் பிரநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.