.

Pages

Saturday, June 17, 2017

நடுக்கடலில் அமெரிக்க போர்க்கப்பல் - பிலிப்பைன்ஸ் சரக்கு கப்பல் நேருக்கு நேர் மோதல் !

அதிரை நியூஸ்: ஜூன் 17
கப்பல் போக்குவரத்து மிகுந்த ஜப்பானின் டோக்யோ பே (Tokyo Bay near Yokosuka Coast) எனப்படும் கடற்பகுதியில் 56 நாட்டிகல் மைல் தொலைவில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஜப்பானிய நேரப்படி 2.30 மணியளவில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 கப்பல்களும் சேதமடைந்தன. மூழ்கும் ஆபத்திலிருந்து 2 கப்பல்களும் தப்பித்தன.

இந்த விபத்தில் (U.S. Navy destroyer) USS Fitzgerald எனும் அமெரிக்க போர்க்கப்பல் பலத்த சேதமடைந்ததுடன் 3 கடற்படை வீரர்களும் காயமடைந்தனர், மேலும் 7 கடற்படை வீரர்களையும் காணவில்லை என்ற போதும் மிக மெதுவாக ஜப்பானின் யோகசுகா துறைமுகத்திற்கு சுயமாக ஓட்டிக்கொண்டு செல்லப்படுகிறது. ஒரளவு கடல்நீரும் உட்புகுந்தது என்றாலும் முழ்கும் ஆபத்தில் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அமெரிக்க கப்பலை விட 3 மடங்கு பெரிதான பிலிப்பைன்ஸ் நாட்டு சரக்கு கப்பலும் ஓரளவு சேமடைந்ததுடன் அதன் 3 கடலோடிகளும் காயமடைந்தனர். இந்தக் கப்பலும் பிற உதவிக்கப்பல்களின் துணையின்றி சுயமாக செலுத்தப்படுகிறது.

இதுபோன்று கப்பல்கள் மோதிக் கொள்வது மிக அரிய சம்பவமாகும். அதிலும் கப்பல் போக்குவரத்து மிகுந்த பகுதியில் நடைபெற்ற இவ்விபத்து மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து எப்படி நேர்ந்தது என்பது குறித்து உடனடி விளக்கங்கள் வெளியாகவில்லை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.