அதிரை நியூஸ்: ஜூன் 21
சவுதி அரேபியாவில் சவூது குடும்பத்தினரின் பரம்பரை ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது ஆட்சியிலிருப்பவர் சவுதி அரேபியா எனும் நாட்டை கட்டமைத்த மன்னர் அப்துல் அஜீஸ் அவர்களின் ஆண் வாரிசுகளே ஒருவர் பின் ஒருவராக மன்னராக முடி சூடி ஆட்சி செய்து கொண்டுள்ளனர்.
பொதுவாக சவுதியில் ஒரு மன்னர் பொறுப்பேற்கும் போது அவருக்குப் பின் ஆட்சி வர வேண்டியவரை மன்னர் குடும்பத்திலிருந்து தேர்வு செய்த பின், முதல் பட்டத்து இளவரசர், இரண்டாம் நிலை பட்டத்து இளவரசர் என முன்கூட்டியே அறிவித்து விடுவார்கள். இந்த பட்டத்து இளவரசர் நியமனங்களை மன்னர் அப்துல் அஜீஸ் குடும்பத்தின் முக்கிய வாரிசுகள் கூடி முடிவு செய்வர்.
இந்த பாரம்பரிய அரச குடும்ப வழக்கப்படி தற்போதைய மன்னர் ஸல்மானுக்கு அடுத்து மன்னராக வர வேண்டியவர் மன்னர் அப்துல் அஜீஸ் அவர்களின் கடைசி மகனான முக்ரீன் அவர்களே ஆவார், அவரும் மன்னர் ஸல்மான் பதவியேற்ற புதிதில் அப்படித்தான் பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டு மிகச் சில நாட்களுக்கு மட்டுமே அப்பதவியில் இருந்தார். பின்பு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக முதன்மை பட்டத்து இளவரசராக முஹமது பின் நாயிப் அவர்களும் இரண்டாம் நிலை பட்டத்து இளவரசராக தற்போதைய மன்னர் ஸல்மான் அவர்களின் மகன் முஹமது பின் ஸல்மான் அவர்களும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று புனித மக்கா நகரில் கூடிய அரசு வாரிசுகளை தேர்வு செய்ய அதிகாரம் பெற்ற மன்னர் குடும்ப உறுப்பினர்கள் 43 பேரில் 31 பேரின் ஆதரவுடன் முதல் நிலை பட்டத்து இளவரசரான முஹமது பின் நாயிப் அவர்களை அதிரடியாக நீக்கிவிட்டு இரண்டாம் நிலை பட்டத்து இளவரசராக இருந்த முஹமது பின் ஸல்மான் அவர்களை தேர்வு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
புதிய பட்டத்து இளவரசரான முஹமது பின் ஸல்மான் அவர்களின் திட்டப்படியே பல்வேறு மாற்றங்கள் சவுதிக்குள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக வேலைவாய்ப்புக்களை சவுதி மயப்படுத்தல், புதிய வரிகள், வாட் வரிகள், தீர்வைகளை அறிமுகப்படுத்துதல், முத்தவாக்கள் எனப்படும் இஸ்லாமிய அறிஞர்கள் பாரம்பரியமாக பெற்றிருந்த அதிகாரங்களை ரத்து செய்தல், சினிமா மற்றும் மேடை இசைக் கச்சேரிகளை அனுமதித்தல், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளுடன் மிக இணக்கமாக செல்லுதல் போன்றவை முக்கியமானவையாகும்.
Source: Arabnews
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.