.

Pages

Wednesday, June 21, 2017

அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் பங்கேற்ற இஃப்தார் நிகழ்ச்சி ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஜூன் 21
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் ஏஜே நகரில் அமைந்துள்ள ஏஜே பள்ளியில் அதிரை பைத்துல்மாலின் மாதந்திரக்கூட்டம் மற்றும் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் பர்கத் தலைமை வகித்தார். செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முஹம்மது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியை மவ்லவி அப்துல் காதர் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். கூட்டத்தில் புனிதமிகு ரமலான் மாதத்தில் ஜக்காத், பித்ரா நிதி வசூல், ஏழை எளியோருக்கு பித்ரா அரிசி விநியோகம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், வழக்கறிஞர் அப்துல் முனாப், பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர், பேராசிரியர் நசுருதீன், எம்.இசட். அப்துல் மாலிக், முஹம்மது இப்ராஹீம், எஸ்.எம்.ஏ செய்யது முஹம்மது புஹாரி, எஸ். அப்துல் ஜலீல், நூர் முஹம்மது, இ. வாப்பு மரைக்காயர், மக்கம், அபூபக்கர், முஹம்மது முகைதீன், கே.கே ஹாஜா நஜ்முதீன், சேக் அப்துல்லா, எம்.ஆர் ஜமால் முஹம்மது, சிராஜுதீன், உமர் மற்றும் சிறப்பு அழைப்பின் பேரில் அதிரை பைத்துல்மால் துபாய் நிர்வாகி எஸ்.எம்.ஏ சாகுல் ஹமீது, மஹல்லா நிர்வாகிகள் ஆஃப்ரின் நெய்னா முகமது, அஹமது அனஸ், எம்.ஏ அப்துல் ஜலீல், தாஜுதீன், முஹம்மது ராவூத்தர், மேலாளர் ஹாஜா செரிப், அலுவலக கணினி இயக்குனர் ஜலால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.