.

Pages

Thursday, June 15, 2017

தஞ்சை மாவட்டத்தில் ஜூன் 19 முதல், ஜூலை 1ந் தேதி வரை வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் குறித்து முன்னேற்பாட்டு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (15.06.2017) நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்பாட்டு முகாம் (Intensified Diarrhoea Control Fortnight) 19.06.2017 முதல் 01.07.2017 வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் உப்புச் சர்க்கரை பொட்டலம் (ORS Pocket) வழங்கப்படும். இத்துடன் வயிற்றுப்போக்கு கண்ட குழந்தைகளுக்கு 14 நாட்களுக்கு Zinc மாத்திரை வழங்கப்படும்.

மேலும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் வயிற்றுப்போக்கு கண்ட குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும் என்பதனையும.; கைக்கழுவும் முறைப் பற்றிய நலக் கல்வியும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகளை பற்றியும், கழிவறை பயன்படுத்தும் வழக்கத்தினை பற்றியும் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வழங்கப்படும்.

மேற்கண்ட முகாமில் அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களிலும் உப்பு சர்க்கரை கரைசல் வழங்கப்படவுளளது. இம்முகாமில் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள்ள அனைத்து வீடுகளிலும் உப்பு சர்க்கரை பொட்டலம் வழங்கப்படும்.

இம்முகாமில் பொது சுகாதாரத்துறை, ஊட்டச்சத்து துறை, சமூக நலத்துறை, நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி, அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் பங்கேற்று ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்;. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

முன்னதாக உயிர் மருத்துவக் கழிவு மேலாண்மை குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசு மருத்துவமனையில் உயிர் மருத்துவக் கழிவு மேலாண்மை குறித்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது எனவும், இவ்வுயிர் மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளை அனைத்தும் தனியார் மருத்துவமனைகள், ஆய்வக பரிசோதனை கூடங்கள், ரத்த பரிசோதனை கூடங்கள் முதலியவற்றில் செயல்படுத்திடவும், செயல்படுத்தும் விதத்தினை கண்காணிப்பு குழு கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் சுப்பிரமணிய ஜெயசேகர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் கோபிநாதன், டாக்டர் எம்.சந்திரசேகர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கே.யோகன், இந்திய மருத்துவக் கழக செயலர் டாக்டர் பிரபாகர், எக்ளோரா தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதி டாக்டர் பீரித்தி மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.