அதிரை நியூஸ்: ஜூன் 15
அமீரக தேசிய வானிலை மையம் (NCMS) அறிவித்துள்ளபடி, இன்று காலை அபுதாபி இமராத்தின் சில பிராந்தியங்களில் காற்றின் ஈரப்பதம் முந்தைய அளவிலிருந்து 100 சதவிகிதம் உயர்ந்ததை தொடர்ந்து வெக்கை (Humidity) உச்சத்தை தொட்டது. மேலும், இந்த வார இறுதி வரை மேலும் உயரும்.
இன்று காலையின் நிலவரப்படி சவுதி எல்லையில் அமைந்துள்ள அல் குவைபத் (Al Ghuwaifat) நகரில் வெக்கை 100 சதவிகிதம் உயர்ந்திருந்தது. அதேவேளை துபை மற்றும் வடக்கு அமீரகப் பிரதேசங்களில் சுமார் 20 சதவிகிதம் மட்டுமே உயர்ந்திருந்தது. இன்று முழுவதுமே கடற்கரை பிரதேசங்களில் 95 சதவிகிதமும் நாட்டின் உட்புறம் மற்றும் மலைப்பிரதேசங்களில் 90 சதவிகிதமும் படிப்படியாக வெக்கையின் அளவு உயரும்.
நாளையும் (வெள்ளி) நாளை மறுநாளும் (சனி) கடற்கரை பிரதேசங்களில் (Coastal Areas) 40C முதல் 45C டிகிரியும், நாட்டின் உட்புறத்தில் 43C முதல் 47C டிகிரியும், மலைப்பிரதேசங்களில் 31C முதல் 38C டிகிரி சென்டிகிரேட் வெப்பமும் நிலவும்.
அமீரகத்தின் கிழக்கு பிராந்தியங்களில் மாலை நேரங்கள் மேகமூட்டத்துடன் காணப்படும். அதேவேளை அமீரகத்தின் திறந்தவெளிப் பகுதிகளில் மிதமான காற்றுடன் கூடிய மண் புழுதி வீசக்கூடும்.
இந்த வார இறுதி வரை வெக்கையின் அளவு இரவு நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலும் 90 முதல் 100 சதவிகிதம் வரை உயர்ந்து காணப்படுமென்பதால் அமீரக சாலைப்பகுதிகளில் பனிப்படலங்கள் குறுக்கிடுவதுடன் சுமார் 1 கி.மீ தூர வரையில் பார்வையை மறைக்கக்கூடும் (Reduce Visiblity).
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.