.

Pages

Saturday, June 17, 2017

அதிரையில் அனைத்து சமயத்தவர் கலந்துகொண்ட மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி !

அதிராம்பட்டினம், ஜூன் 17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நலச் சங்கம் சார்பில் அனைத்து மதத்தினரும் பங்கேற்ற மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நலச்சங்க தலைவர் ஹாஜா செரிப் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சிராஜுதீன், பொதுச்செயலாளர் நூருல் அமீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் மன்சூர் அகமது, முன்னாள் நிர்வாகிகள் சாகுல் ஹமீது, ஜெஹபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பின் பேரில் அதிராம்பட்டினம் பகுதிகளை சேர்ந்த அனைத்து சமயத்தவர்கள் மற்றும் நலச்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் நோன்பு கஞ்சி, முர்தபா, பழங்கள், ஜூஸ், கடல்பாசி உள்ளிட்ட 12 வகை உணவுகள் பரிமாறப்பட்டன.
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.