எஸ்டிபிஐ கட்சியின் 9 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி அதிராம்பட்டினத்தில் 6 இடங்களில் கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் முகமது அஜார் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சியின் 9 ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி அதிராம்பட்டினம் செக்கடி மேடு, வண்டிப்பேட்டை, சிஎம்பி லேன் வி.கே.எம் ஸ்டோர் அருகில், கல்லூரி முக்கம், ஈசிஆர் சாலை பிலால் நகர் ரயில்வே கேட் அருகில் ஆகிய 6 இடங்களில் அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இசட். முகமது இலியாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான், அதிரை பேரூர் தலைவர் முஹம்மது அஜார், துணைத் தலைவர் நடராஜ், துணைச்செயலர்கள் நூருல் அமீன், சலீம் ஆகியோர் தலா ஒரு இடங்களில் எஸ்டிபிஐ கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
Masha Allah....
ReplyDeleteஅதிராம் பட்டினம் தக்வாபள்ளியில் இன்று இஃப்தாருக்கு நானும் லட்டு சாப்பிட்டேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் .
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete