தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வாயிலாக செயல்படுத்தப்படும் வட்டாரங்களான தஞ்சாவூர் (8 நபர்கள்), பட்டுக்கோட்டை(4 நபர்கள்), ஒரத்தநாடு (8 நபர்கள்), திருவிடைமருதூர் (6 நபர்கள்), கும்பகோணம் (6 நபர்கள்), பாபநாசம் (6 நபர்கள்), திருவையாறு (6 நபர்கள்), திருவோணம் (4 நபர்கள்), திருப்பனந்தாள் (6 நபர்கள்) அம்மாபேட்டை (8 நபர்கள்), பூதலூர் (8 நபர்கள்), மதுக்கூர் (6 நபர்கள்), பேராவூரணி (4 நபர்கள்), மற்றும் சேதுபாவாசத்திரம் (6 நபர்கள்) ஆகிய வட்டாரங்களில் உள்ள சுய உதவிக்குழுக்களின் கடன்தேவை மற்றும் வசூல் மேலாண்மை பணிகளை வங்கிகளுடன் மேற்கொள்ள “சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள்” ஒரு களப்பகுதிக்கு இரண்டு நபர்கள் வீதம் 86 நபர்கள் எழுத்துத்தேர்வு அடிப்படையில் கீழ்காணும் தகுதிகளுக்குட்பட்டு தற்காலிகமாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான தகுதிகள் :
• ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பை சார்ந்த குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
• தேர்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினர் அதே களப்பகுதிக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
• மக்கள் நிலை ஆய்வால் (PIP) கண்டறியப்பட்ட உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
• 35 வயதிற்குட்பட்டவராகவும், குறைந்த பட்ச கல்விதகுதி 102 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நன்றாக எழுதப் படிக்க மற்றும் கணக்கிடும் திறன் உடையவரகவும் இருத்தல் வேண்டும்.
• நல்ல தகவல் தொடர்பு திறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.
• கைப்பேசி உள்ளவராகவும், குறுஞ்செய்தி அனுப்பத் தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
• கணினி திறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.
• அருகாமையில் உள்ள வங்கிகளுக்கு செல்ல தயாராக இருத்தல் வேண்டும.
• பேச்சு திறமை பெற்றவர்களாக இருத்தல் வேண்டும.
தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மாதம் ரூ. 2000/- மதிப்பூதியமாக சம்மந்தப்பட்ட ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பின் மூலம் வழங்கப்படும். மேற்குறிப்பிட்டவாறு தொடர்புடைய களப்பகுதியை சேர்ந்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பங்களை தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அறை எண்.223 2-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு 15.03.2018-க்குள் அனுப்ப தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.