பட்டுக்கோட்டை, மார்ச் 06
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ம.கோவிந்தராசு தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (6.3.2018) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வருவாய் வட்டத்தை சார்ந்த 109 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை கோரி 82 விண்ணப்பங்களும், வேலைவாய்ப்பு கோரி 4 விண்ணப்பங்களும், வங்கிக்கடன் உதவி கோரி 5 விண்ணப்பங்களும், மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம் கோரி 4 மனுக்களும், சக்கர நாற்காலி கோரி 3 மனுக்களும், மனவளர்ச்சிக்குன்றியோருக்கான உதவித்தொகை வேண்டி 11 மனுக்களும் பெறப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் 6 நபர்களுக்கு ரூ.18,000/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 3 நபர்களுக்கு சக்கர நாற்காலியும், ஒரு நபருக்கு தாங்கிகளும், இரண்டு நபர்களுக்கு கறுப்புக்கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல்களும் வழங்கப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் அறிவுத்தப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா. இரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சமூக பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் கஜேந்திரன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.