அதிரை நியூஸ்: மார்ச் 06
கண் தெரியாத மூதாட்டியை கண் தெரிந்த விமான ஊழியர்கள் தவறான விமானத்தில் மாற்றி அனுப்பி வைத்து சாதனை
மரியோ லாரியோஸ் என்கிற 80 வயது மூதாட்டிக்கு 'இங்கிலீஷ்' பேசவும் தெரியாது, சரிவர கண்ணும் தெரியாது என்றாலும் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தன் மகளுக்கு துணையாக இருப்பதற்காக எல் ஸல்வடேர் (El Salvador) நகரிலிருந்து நார்த் கரோலினா (North Carolina) செல்வதற்காக யுனைடெட் ஏர்லைன்ஸில் டிக்கெட் எடுத்திருந்தார்.
எல் ஸல்வாடேரிலிருந்து புறப்பட்டவர் ஹவுஸ்டன் (Houston) நகரில் விமான மாறி நார்த் கரோலினா செல்ல வேண்டும் ஆனால் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள் கொலராடோ மாகாணத்தின் டென்வர் (Denver) நகருக்கு தவறாக அனுப்பி வைத்தனர்.
டென்வருக்கு சென்ற பிறகு தான் விமான ஊழியர்களின் தவறு தெரிந்தது. யுனைடெட் விமான நிறுவனம் 12 மணிநேர காத்திருப்புக்கு பின்பு டென்வரிலிருந்து நார்த் கரோலினா செல்லும் விமானத்தில் மீண்டும் மூதாட்டியை சரியாக அனுப்பி வைத்துவிட்டு சமர்த்தாக வருத்தமும் தெரிவித்துள்ளனர் ஆனால் மூதாட்டியின் மகள் மிக்கி பராடீஸ் என்பவர், யுனைடெட் நிறுவனம் எனது தாயை ஒரு பயணியாக நடத்தாமல் ஒரு லக்கேஜாக கருதியுள்ளது என பாய்ந்துள்ளார், நியாயந்தானே!
Source: NewsHub / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.