.

Pages

Saturday, January 11, 2014

அதிரை அருகே கத்தியால் குத்த வந்த மர்ம நபர்களிடம் 2 பவுன் நகையை பறிகொடுத்துவிட்டு தப்பித்த முத்துப்பேட்டை குடும்பத்தினர் !

முத்துப்பேட்டை குட்டியார் பள்ளி தெருவை சேர்ந்தவர் சேக் முஹம்மது இவரின் உறவினர் முஹம்மது அப்துல் பாசித். இவர்கள் இருவரும் இன்று மதியம் 3.30 மணியளவில் இரு பெண்கள் உட்பட 5 பேரைகொண்ட தனது குடும்பத்தினருடன் அதிரை கடற்கரைதெருவில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக டாட்டா நானோ வாகனத்தில் பயணம் மேற்கொண்டனர்.

வாகனம் தம்பிக்கோட்டையை வந்தடைந்ததும் அங்குள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிவிட்டு புறப்பட முற்படும்போது இருசக்கர பல்சர் வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் வாகனத்தின் கண்ணாடியில் பொறிக்கப்பட்டிருந்த 'மாஷா அல்லாஹ்' என்ற அரபிக் எழுத்துகளில் எச்சிலை துப்பிவிட்டு, வாகனத்தில் இருந்தவர்களிடம் வம்பு இழுத்தாகவும், இதைதொடர்ந்து நிலைமை மோசமாவதை அறிந்துகொண்டு இவர்கள் அங்கிருந்து வாகனத்தை விரைவாக ஓட்டி தப்பித்துள்ளனர். இவர்களை பின்தொடர்ந்த மர்ம கும்பல் மேலும் இருவரை தங்களுடன் சேர்த்துக்கொண்டு மீண்டும் வாகனத்தை இடைமறித்து அதில் இருந்தவர்களை தாக்கி இருக்கின்றனர். அப்போது மர்ம கும்பலில் இருந்த ஒருவர் தனது பாக்கெட்டில் வைத்து இருந்த கத்தியால் வாகனத்தை ஓட்டிச்சென்ற முஹம்மது அப்துல் பாசித்தை நோக்கி குத்த முற்பட்டுள்ளார். உடனே வாகனத்தின் பின்புற இருக்கையில் அமர்ந்து இருந்த இவரின் பெரியம்மா தனது கையால் தடுக்க முயன்றுள்ளார். மர்ம கும்பல் அவரின் கையில் அணிந்துள்ள 2 பவுன் மதிப்புள்ள செயினை பறித்துள்ளதாக தெரிகிறது.

பெரும் அசம்பாவிதம் நடக்க இருப்பதை எண்ணிய இவர்கள் பெரும் அச்சத்துடன் வாகனத்தை அதிரைக்கு ஒட்டி வந்துள்ளனர். இதை தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து சேக் முஹம்மது அதிரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுகொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்தனர். மேலும் புகார் குறித்து விரைவாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

ஒன்றிணைந்த அதிரை சமுதாய அமைப்புகள் :
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அதிரை நகர SDPI, த.மு.மு.க, TNTJ ஆகிய சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் அதிரை இளைஞர்கள் காவல் நிலையத்திற்கு திரண்டு வந்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார்கள். மேலும் பாதிக்கப்பட்டோருக்கு வேண்டிய உதவிகளை செய்தனர்.

பொதுமக்களின் எதிர்பார்ப்பு :
குறிப்பிட்ட அந்த பகுதியில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும், இந்த பகுதியில் வாழும் இரு சமுதாய மக்கள் காலங்காலமாக அன்னியோன்யமாக வாழ்ந்து வருகின்றனர் என்றும், இவர்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் விதமாக சமூக விரோதிகள் சிலர் இதுபோன்ற காரியங்களில் அவ்வப்போது ஈடுபடுவதாகவும், இதற்கு காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடராதவாறு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அங்கே கூடியிருந்த பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

களத்திலிருந்து அதிரை நியூஸ் குழு





8 comments:

  1. எலக்சன் வரும் காலங்களில் இதுபோன்று தரங்கெட்ட செயல்களை அரசியல் நோக்கத்திற்காக செய்வார்கள். அணைத்து சமுதாயத்தினரும் ஒன்றுபட்டு இதுபோன்றவர்களை காவல்துறையிடம் காட்டிவிடுங்கள்.

    ReplyDelete
  2. சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் புகார் அளித்துக்கொண்டே இருக்கிறோம்.இந்து முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் கயவர்களை காவல்த்துறை கைதுசெய்யவேண்டும்.இந்த தாக்குதல் தொடருமானால்???????????????????? நாங்கள் கோழை அல்ல

    ReplyDelete
  3. கவனிக்கப்பட வேண்டிய விஷயம் .........தொடர் வழிப்பறி திருட்டு மற்றும் குறிப்பிட்ட இஸ்லாமிய சமூகத்தை குறி வைத்து நடத்தும் இதுபோன்ற தர குறைவான செயல்களை காவல் துறை தடுத்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் .அடிக்கடி இதுபோன்ற சம்பவம் நடக்கும் குறிப்பிட்ட தம்பிகோட்டை ஏரியாவில் ECR ன் சிறப்பு காவல் கண்காணிப்பு படை அமைக்க படவேண்டும் மற்றும் முறையான விசாரணைகளும் அவசியம் இல்லையேல் இனகலவரத்தை தூண்டும் இதுபோன்ற செயல்களுக்கு எதிராக மக்கள் போராட நேரிடும்.இல்லையேல் அந்த ஏரியாவில் இதற்கு முன் நடந்த விபத்துக்களில்சில இஸ்ல்லாமிய நபர்கள் பாதிக்கப்பட்டதும் இறந்ததும் கூட இவர்களின் சதி வேலையா என்று கூட சந்தேகம் ஏற்படுகிறது .

    ReplyDelete
  4. பன்னிகள் கூட்டமாய் சேர்ந்துக்கொண்டு வீரத்தை காட்டுகிறது,
    ஆனால் பலத்தில் சிறந்தவர்கள் முஸ்லிம்கள் என்று அறிந்தும் நாங்கள் தயங்குகிறோம்,

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.

    பன்றிகள் கூட்டமாய் சேர்ந்துக்கொண்டு வீரத்தை காட்டுகிறது,
    ஆனால் பலத்தில் சிறந்தவர்கள் முஸ்லிம்கள் என்று அறிந்தும் ஏன் இந்த தயக்கம்?

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. பன்றிகள் கூட்டமாய் சேர்ந்துக்கொண்டு வீரத்தை காட்டுகிறது,
      ஆனால் பலத்தில் சிறந்தவர்கள் முஸ்லிம்கள் என்று அறிந்தும் ஏன் இந்த தயக்கம்? இன்ஷா அல்லாஹ் விரைவில்''''''''''''''''''''''''''''''''

      Delete
  6. அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் முத்துப்பேட்டை டு அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் நடக்கிறது. ஏற்கனேவே கேரளாவை சார்ந்தவர்கலின் மீது இதுபோன்ற குற்றச்செயல்களில் அதன்பகுதியில் வசிக்கும் சில விசமிகள் இந்த தவறை நடத்தி வருகிறார்கள். இதற்கு சரியான வகையில் பாடம் கற்பித்தால்தான் திரும்பவும் அவர்கள் செய்வதற்கு அச்சப்படுவார்கள். எந்த வாகனத்தில் பெண்கள் தனியாக வருகிறார்கள் என்பதை நன்கு அறிந்துகொண்டு அதன்பிறகு குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் எப்படியாவது நமது பகுதியில் மதக்கலவரத்தை உண்டுபண்ணி ஆதாயம் பார்க்கவேண்டும் என்கிற குறிக்கோளுடன் ஈடுபட்டு வருகிறார்கள். இதை முற்றிலும் ஒழிப்பதற்கு அனைத்து இயக்கமும் எவ்வித முரண்பாடில்லாமல் ஒத்துழைத்து நல்லதொரு தீர்வினை காணவேண்டும். நாம் செய்யும் நல்ல முடிவின்படி எதிர்காலத்தில் எவரும் நம்மீது எந்த தவறும் செய்யக்கூடாது. இதை நினைத்து அஞ்சிக்கொண்டே இருக்கவேணும். இன்ஷா அல்லாஹ்...முயற்சி செய்யுங்கள்...விசமிகளை நபி (ஸல்) அவர்களின் வழியில் ஒழிப்பதற்கு ....!

    ReplyDelete
  7. கவனிக்கப்பட வேண்டிய விஷயம தொடர் வழிப்பறி திருட்டு மற்றும் குறிப்பிட்ட இஸ்லாமிய சமூகத்தை குறி வைத்து நடத்தும் இதுபோன்ற தர குறைவான செயல்களை காவல் துறை தடுத்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் . இதுபோன்ற செயல்களுக்கு எதிராக மக்கள் போராட நேரிடும்.இல்லையேல் அந்த ஏரியாவில் இதற்கு முன் நடந்த விபத்துக்களில்சில இஸ்ல்லாமிய நபர்கள் பாதிக்கப்பட்டதும் இறந்ததும் கூட இவர்களின் சதி வேலையா என்று கூட சந்தேகம் ஏற்படுகிறது .போராடுவதைத்தவிர வேறு வழிஇல்லை.இதை முறைப்படி மேலிடத்துக்கு கொண்டுபோகவேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.