.

Pages

Monday, January 6, 2014

அதிரையில் ஏற்பட்ட விபத்தில் வாகனம் மின்கம்பத்தில் மோதி நொறுங்கியது !

அதிரையில் இன்று ஏற்பட்ட விபத்தில் வாகனம் மின்கம்பத்தில் மோதி நொறுங்கியது.
அதிரை கடற்கரைதெருவை சேர்ந்தவர் அஷ்ரப். இவர் இன்று மதியம் 4 மணியளவில் பட்டுக்கோட்டையிலிருந்து அதிரையை நோக்கி தனது இன்னோவா காரை ஓட்டி வந்துள்ளார். வாகனம் கூட்டுறவு வங்கி அருகே கடந்து செல்லும்போது எதிரே வரும் பேருந்தை அறிந்த இவர் திடீர் ப்ரேக் போட்டுள்ளார். உடனே வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி தூரத்தில் உள்ள [ மருத்துவர் ராஜு அவர்களின் கிளினிக் எதிரே ] மின்கம்பத்தில் மோதி விபத்தானது.

இதில் மின்கம்பம் சேதமடைந்தது. இடது பக்கம் இருந்த கழிவு நீர் வாய்க்காலில் இறங்கியதில் வாகனத்தின் முகப்பு பகுதி, கதவுகள், கண்ணாடி உள்ளிட்டவை சேதமடைந்தது.

மின்கம்பத்தில் மோதியதால் நிகழ இருந்த பெரும் விபத்து தடுக்கப்பட்டது. லேசான காயமடைந்த அஷ்ரப் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

தகவலறிந்த மின்சார ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்கம்பதை சரிசெய்தனர். விபத்து குறித்து அதிரை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதனால் இந்தப்பகுதி முழுதும் சில மணிநேரங்கள் பரபரப்பாக காணப்பட்டது.







2 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி. .

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. நடந்த நிகழ்ச்சியே பார்க்கும்பொழுது இவ்விபத்திற்க்கு காரணம் ஓட்டுனரின் கவனக்குறைவேயாகும். அதிவேகமாக சென்ற வாகனம் BRAKE பிடித்ததும் கட்டுப்பாடை இழந்து விபத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
    இன்றைய இளைய ஓட்டுனர்கள், பொது மக்கள் அதிகமான நடமாட்டம் உள்ள வீதிகள், கடைதெரு போன்ற பகுதிகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை TREND -ஆக வைத்துள்ளனர்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.