.

Pages

Monday, January 27, 2014

உடல்நிலை பாதிப்படைந்த வயதான 3 குழந்தைகளுக்கு லண்டன் வாழ் அதிரையர் வழங்கிய மருத்துவ உதவி [ காணொளி ] !

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம், மூங்கில்துரைப்பட்டு கிராமத்தில் மேட்டூர் வடக்கு தெருவில் வசிக்கும் மஹபூப்கான் மனைவி சர்தார்னி இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள். 1. வாஹித்கான் [ வயது-21 படிப்பு 10],
2. அம்ஜத்கான் [ வயது-18, படிப்பு 7 ], 3. சாரூக்கான் [ வயது-15, படிப்பு 6 ]

இம்மூன்று குழந்தைகளுக்கும் கடந்த 7 ஆண்டு காலமாக ஒன்றின் பின் ஒன்றாக மூவருக்கும் தொடர்ந்து பக்கவாதம் நோய் தாக்கி படுத்த படுக்கையாக இருப்பதினால் மருத்துவ சிகிச்சை செய்ய இயலாமல் கடந்த
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளின் தந்தை மஹபூக்கான்
இக்குடும்பத்தை விட்டு சென்றுவிட்டார். இதுவரை எங்கே இருக்கிறார் என்று எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இம்மூன்று பிள்ளைகளை வைத்து மிகவும் சிரமப்படும் இச்சகோதரிக்கு எந்த ஒரு வருமானமும் இல்லை. பிள்ளைகளின்
அனைத்து சுயதேவைகளையும் இவர் இல்லாமல் செய்து கொள்ளாத நிலை இருப்பதினால் இப்பிள்ளைகளின் தாயே பிள்ளைகளுக்கு தேவையான
அனைத்தையும் செய்துகொண்டு வருவதால் இவரால் கூலி வேலைகளுக்கு கூட செல்ல முடியவில்லை ஆகையால் முகநூல் சொந்தங்கள் அனைவரும் இப்பதிவினை லைக் செய்யாமல் உங்களின் முகநூல் நண்பர்களுக்கு ஷேர்
செய்து இப்பிள்ளைகளுக்கும் இச்சகோதரிக்கும் உங்களால் முடிந்த உதவிசெய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உதவிக்கு:
வங்கி விபரம்-
Holder Name : SARDHANI M
A/C.No. : 18230100013606
Bank Name : BANK OF BARODA
Branch : MOONGILDURAIPATTU BRANCH
IFSC Code : BARB0MOONGI
Dist.-villupuram

என்ற முகநூல் அறிவிப்பை பார்வையிட்ட நமதூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், தொடர்ந்து பல்வேறு மருத்துவ, வாழ்வாதார உதவிகளை முன்னின்று செய்துவரும் லண்டன்வாழ் அதிரையர் S.A இம்தியாஸ் அஹமது அவர்கள் மூலம் திரட்டப்பட்ட ரூபாய் 87,500/- ஐ, த.மு.மு.க அதிரை நகர நிர்வாகிகளுக்கு அனுப்பி அவற்றை நேரடியாகச் சென்று வழங்க கேட்டுக்கொண்டார்.

இதைதொடர்ந்து நேற்று முன்தினம் அதிரை நகர த.மு.மு.க / ம.ம.க நிர்வாகிகள் பாதிப்படைந்த குழந்தைகளை நேரடியாக பார்வையிட்டு உதவியை வழங்குவதற்காக வாகனம் மூலம் அதிரையிலிருந்து வெகுதொலைவில் இருக்கும் மூங்கில்துரைப்பட்டு கிராமத்தை நோக்கி புறப்பட்டுச்சென்றனர்.

விழுப்புர மாவட்ட ம.ம.க செயலாளர் முஹம்மது அலி அவர்களோடு நேரடியாக வீட்டிற்கு சென்று பாதிப்படைந்த 3 வாலிபர்களையும், தனது பிள்ளைகளுக்காக தாய் செய்கிற பணிவீடைகளையும் நேரடியாக பார்த்து அறிந்துகொள்கின்றனர்.

லண்டன் வாழ் அதிரையர் இம்தியாஸ் அஹமது வழங்கிய ரூபாய் 87,500/-, துபாய் வாழ் அதிரையர் தாஹா அவர்கள் வழங்கிய உதவியோடு, அங்கே சென்ற தமுமுக நிர்வாகிகள் இந்த குடும்பத்தின் ஏழ்மை நிலையை அறிந்துகொண்டு தங்களின் பங்காக வழங்கிய ரூபாய் 8,700 /- ஐ சேர்த்து மொத்தம் ரூபாய் 97,200/- ஐ வழங்கினார்கள். உதவியை பெற்றுக்கொண்ட சகோதரி சர்தார்னி நன்றியை தெரிவித்துக்கொண்டதோடு வழங்கியோருக்கு துவாவும் செய்தார்.

உடல்நிலை பாதிப்படைந்த 3 வாலிபர்கள் குறித்து த.மு.மு.க / ம.ம.ம கட்சியின் அதிரை கிளை பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி மற்றும் த.மு.மு.க தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அஹமது ஹாஜா ஆகியோர் நம்மிடம் வைக்கும் உருக்கமான வேண்டுகோள் !















5 comments:

  1. இம்மூன்று பிள்ளைகளை வைத்து மிகவும் சிரமப்படும் இச்சகோதரிக்கு .

    முகநூல் சொந்தங்கள் அனைவரும் இப்பதிவினை லைக் செய்யாமல் உங்களின் முகநூல் நண்பர்களுக்கு ஷேர்
    செய்து இப்பிள்ளைகளுக்கும் இச்சகோதரிக்கும் உங்களால் முடிந்த உதவிசெய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    உதவிக்கு:
    வங்கி விபரம்-
    Holder Name : SARDHANI M
    A/C.No. : 18230100013606
    Bank Name : BANK OF BARODA
    Branch : MOONGILDURAIPATTU BRANCH
    IFSC Code : BARB0MOONGI
    Dist.-villupuram

    ReplyDelete
  2. கண்கள் கலங்கினேன். உள்ளம் உருகினேன்.
    யா அல்லாஹ் !
    அந்த தாய்க்கு இங்குமங்கும்சுவர்கத்தை வழங்கிவிடு.
    அவர்களின் துயரங்களை அழித்துவிடு.
    மீண்டும் பழைய நிலைக்கு நல்ல ஆரோக்கியத்தையும், செல்வா செழிப்பையும் அக்குழந்தைகளுக்கு தந்துவிடு.
    உன் பேரில் பரிபூரண நம்பிக்கைக் கொண்ட நல் அடியார்களாக ஆக்கிவிடு.
    அவர்கள் அறிந்தும் அறியாமல் செய்த பாவங்களை மன்னித்து விடு.
    இது போன்ற மக்களுக்கு உதவிடும் நல் உள்ளங்களுக்கு உன் அருளை பொழிந்து நேர் வழியில் என்றும் நிலைத்து வாழ அருள் புரிவாய்.
    ஆமீன் !

    ReplyDelete
  3. இம்மூன்று பிள்ளைகளும்ஒரே குடும்பத்து உறவுகள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட இளம்பிள்ளை வாதம் இவர்களுக்கு உதவிய அணைத்து நல்ல உள்ளங்களுக்கும்"அல்லாஹ்" நற்கூலியை கொடுப்பான் ;உதவிபுரிய தூரம் என்று பாராமல் உதவிய பொறுப்பாளர்களுக்கும் "அல்லாஹ்" நன்மை அளிப்பான்

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    தர்மங்களில் பிரதிபலன் தேவைப்படும் பட்ச்சத்தில் அவைகளை முறையாக சேரும் இடத்தில் சேர்த்து விடுங்கள்.இப்படி பாதிக்க பட்டோரை தேடிப்போய் செய்யும் இதுபோன்ற தர்மங்கள் அல்லாவிஹ் பொருத்தத்தை பெற்றதாகவே அமையும் ...ஆமீன் ........வாழ்க உங்கள் மக்கள் பனி .

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  5. பார்க்க மிகப் பரிதாபமாக இருக்கும் இம்மூன்று பிள்ளைகளின் நிலை ஒருபுறம் அவர்களுக்கு பணி விடை செய்வது என்பது இன்னொரு புறம் பொருளாதாரம் அரவணைப்பிற்கு ஆளில்லாதது ஒரு புறம். இப்படி பல சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கும் இக்குடும்பத்திற்கு ஒரு ஆறுதலாக அனைவரும் நம்மால் ஆன உதவிகளை தாராளமாக செய்ய வேண்டும். இந்த சூழ்நிலையில் கொடுத்து உதவுபவர்களுக்கு அல்லாஹ் இம்மையையும் மறுமையையும் சிறப்பாக்கித் தருவான்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.