.

Pages

Saturday, January 25, 2014

கிடப்பில் போடப்பட்ட மாடு பிடிக்கும் திட்டத்தை அமல்படுத்த பேரூராட்சி உதவி இயக்குனர் உத்தரவு !

அதிரை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 1 முதல் 21 வார்டுகளில் ஆடு மற்றும் மாடுகள் அலைந்து திரிகின்றன. இதனால் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கப்பட்டு இறந்து வருகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி ஆபத்து ஏற்படுகிறது. எனவே [ 21-11-2013 ] வியாழக்கிழமை முதல் கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து வளர்க்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஆடு மாடுகளை பிடித்து பேரூராட்சி கட்டுப்பாட்டில் வைத்து பொது ஏலம் விடப்படும் என பேரூராட்சியின் செயல் அலுவலரால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து பேரூராட்சி சார்பாக நகரில் சுற்றி திரிந்த மாடுகளை ஊழியர்களை கொண்டு ட்ராக்டர் வாகனத்தில் ஏற்றிவரப்பட்டது. பொதுமக்களின் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டன. இதனால் தெருவில் நடமாடும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பேரூராட்சி உதவி இயக்குனரின் சார்பாக நேற்று வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்தி குறிப்பில் மாடுபிடிக்கும் திட்டத்தை தஞ்சை மாவட்ட பேரூராட்சி பகுதிகளில் அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. நல்லது நடந்தால் சரி,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.