நீர் வரத்து கடந்த நள்ளிரவு முதல் அதிகமாக வருவதால் V.K.M ஸ்டோர் அருகில் உள்ள வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பை அடைப்பதற்காக மணல் மூட்டைகளை வைத்து தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக்கு பிறகு, தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் மரைக்கா குளத்திற்கு செல்லும் சிஎம்பி வாய்க்கால் இணைப்பில் உள்ள குழாயில் தடுப்பு வைத்து தண்ணீரின் வேகத்தை குறைத்துனர். வேகத்தை குறைத்ததை அடுத்து மரைக்கா குளத்திற்கும், தண்ணீர் முழுமையாக நிரம்பாமல் உள்ள செக்கடி குளத்திற்கு தண்ணீர் வரத்து சீராக சென்றுகொண்டிருக்கின்றன. இதனால் இந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.
நேற்று பார்வையிட்டதை போல் மீண்டும் இன்று காலை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைதலைவர் ஹாஜி M.S. ஷிஹாப்புதீன், தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் துணைதலைவர் P.M.K தாஜுதீன், செயலாளர் ஜஃபருல்லா மற்றும் அதிமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும், தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நலபிரிவின் செயலாளருமாகிய அதிரை அப்துல் அஜீஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அப்பகுதியின் இளைஞர்கள் பலர் தண்ணீர் வரத்து அதிகமாக வருவதை பார்வையிட்டனர்.
தண்ணீர் வரத்தை மீண்டும் தொடர்ந்து சில நாட்களுக்கு நமதூருக்கு கொண்டு வருவதற்கு உரிய முயற்சிகள் ஏற்பாட்டளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சி வெற்றிபெற்றால் சிஎம்பி வாய்க்கால் இணைப்பில் உள்ள ஒவ்வொரு குளங்களுக்கும் ஒன்றபின் ஒன்றாக தண்ணீர் நிரப்பப்படும் என தெரிகிறது. வாய்க்காலில் உடைப்பு - அடைப்பு ஏற்படாதவாறு ஆங்காங்கே இளைஞர்கள் பலர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
2006க்குப்பின் இன்றுதான் இவ்வழியே தண்ணீர் கரைபுரண்டு ஓடுது. மண் அரிப்பு ஏற்பட்டு அருகில் இருக்கின்ற மின்கம்பங்கள் சாயப்போகுது, பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
நமதூர் குளங்களுக்கு தண்ணீர் கொண்டுவர முன்பும் இப்போதும் முயற்சி செய்த அனைவருக்கும் நன்றியும் துஆவும்..
ReplyDeleteஅப்படியே செடியன் குளத்தையும் மறந்துட வேணாம்...அதற்கு மிக முக்கியமாக தண்ணீர் வேண்டும்..
மிக்க மகிழ்ச்சி ஒன்றுபடுவோம் வெற்றியடைவோம்
ReplyDeleteதண்ணீரை விட ஒற்றுமையை கண்டு மனம் மகிள்கிறேன்
ReplyDeleteஅல்லாஹ் இதை என்றும் நம் மனதில் வித்திடுவனக
This comment has been removed by the author.
ReplyDeleteஊரின் ஒற்றுமையைக் கண்டு தண்ணீருக்கே சந்தோசம் தாங்க முடியவில்லை. மாஷா அல்லாஹ். உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.
ReplyDelete