.

Pages

Tuesday, January 7, 2014

அதிரைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது ! இன்று நள்ளிரவில் அதிரை குளங்களுக்கு வந்தடையும் !

கல்லணை கால்வாய் கோட்ட பொறுப்பில் இருக்கும் அலுவலர்களால் பட்டுக்கோட்டை வட்டார எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பாசனத்திற்காகவும், வறண்டு காணப்படும் ஏரி, குளங்களுக்கும் முறை வைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றன.

பல்வேறு தரப்பு கோரிக்கைகளின் அடிப்படையில் அதிரைக்கு நேற்றைய தினம் தண்ணீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் மகிழங்கோட்டை பகுதிக்கு ஒரு நாள் மாத்திரம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என மகிழங்கோட்டை ஊராட்சிமன்ற தலைவர் உள்ளிட்ட அப்பகுதியினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த பகுதிக்கு நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்தகெடு இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் அதிரை பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் இன்று நள்ளிரவில் அதிரை குளங்களுக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளும் கட்சியினரோடு நல்ல தொடர்பை வைத்துள்ள அதிமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும், தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நலபிரிவின் செயலாளருமாகிய அதிரை அப்துல் அஜீஸ் அவர்களும் தனது முயற்சியாக சம்பந்தபட்ட துறை அலுவலர்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடம் தொடர்ந்து வேண்டுகோள் வைத்தவண்ணம் இருந்து வந்தார்.

இன்று தண்ணீர் திறந்துவிடப்படும் போது தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நலபிரிவின் செயலாளருமாகிய அதிரை அப்துல் அஜீஸ், அதிரை பேரூராட்சி துணைத்தலைவர் பிச்சை, அதிரை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் சிவக்குமார், உதயகுமார், ஹிமாயத்துல் இஸ்லாம் சங்க துணைதலைவர் குலாப்ஜான் அன்சாரி, அதிரை TIYA தலைவர் ஜமாலுதீன், சமூக ஆர்வலர் முகம்மது அப்துல்லா, அதிமுக அதிரை நகர துணைச்செயலாளர் தமீம் அன்சாரி, மகிழங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மகிழங்கோட்டை கிராம ஆர்வலர்கள் மற்றும் அதிரை இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதைதொடர்ந்து அதிரை பேரூராட்சி துணைத்தலைவர் பிச்சை தலைமையில் மேற்கே உள்ள சிஎம்பி வாய்க்காலை பார்வையிடச்சென்றனர்.

நேற்று இரவு முதல் அதிரை TIYA அமைப்பினர் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை கண்டறிந்து சரிசெய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இரவும் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டால் அவற்றை கண்டறிந்து சரிசெய்ய இருப்பதாக உத்தேசித்துள்ளனர். இதற்காக உடைப்பு ஏற்படும் பகுதிகளில் மணல் மூடைகளை ஆங்காங்கே சேமித்து வைத்துள்ளனர். இவர்களுக்கு உதவியாக மகிழங்கோட்டையை சேர்ந்தவர்களும் இரவு நேர பணிகளில் ஈடுபட உள்ளனர்.

தண்ணீரின் வேகத்தை குறைப்பதற்காக ஆங்காங்கே மணல் மூடைகளை வைத்து தேக்கி வைத்துள்ளனர். சிஎம்பி வாய்க்கால் ஈரப்பதமாக இருப்பதால் தண்ணீர் சீராக விரைவில் அதிரைக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.









1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி. .

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.