.

Pages

Friday, January 31, 2014

அதிரையரை அசர வைக்கும் அரியமான் பீச் ! [ புகைப்படங்கள் ]

அதிரையிலிருந்து ஈசி ஆர் சாலை வழியாக 175 கிலோ மீட்டர் தொலைவில் இராமேஸ்வரம் செல்லும் பிராதன சாலையில் பாம்பனிலிருந்து 11 கிலோ மீட்டர் முன்பாக இடது பக்கமாக பிரியும் குறுக்கு சாலையை கடந்து சென்றால் அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அரியமான் கடற்கரை பகுதி அமைத்துள்ளது. பாக் நீரிணைப்பின் ஒரு பகுதியில் 150 மீட்டர் அகலமும், 2 கிலோ மீட்டர் நீளமும் உடைய இந்த கடற்கரைக்கு வார இறுதி நாட்களை கழித்திட பெருவாரியான மக்கள் வருகை தருகின்றனர்.

அமைதியான சூழலில் மென்மையான குளிர்காற்று தவழ்ந்து வரும் இந்த கடற்கரையில் கண்ணாடி போன்று பளபளக்கும் கடல்நீரில் தினமும் குளித்து மகிழ்வோர் ஏராளம். குறிப்பாக இராமநாதபுரம், இராமேஸ்வரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிப்போர் அடிக்கடி வந்து செல்கின்றனர். இவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் அடிக்கடி அதிரையர்கள் இந்த கடற்கரைக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக ஒருமுறை அங்கு சென்றவர் மறுமுறை மீண்டும் செல்ல தவறியதில்லை.

தொலை தூரத்திலிருந்து இங்கு வருகை தரும் பெரும்பாலானோர் தாங்கள் எடுத்துவரும் உணவை குளித்து முடித்தவுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். அதேபோல் இங்கு வருகை தரும் சிலர் சமைப்பதற்கு தேவையான சாமான்களை எடுத்து வந்து சமைத்தும் சாப்பிடுகின்றனர். சமைப்பதற்கு ஏற்ற பரந்த இடம் இங்கு காணப்படுவதால் உணவு பிரியர்களுக்கு மகிச்சியை ஏற்படுத்துகின்றன. சமையலுக்கு தேவையான அனைத்து சாமான்களையும் மறக்காமல் எடுத்து செல்வது நமக்கு ஏற்படும் வீண் அலைச்சலோடு மன உளைச்சலையும் தவிர்க்க உதவும். 

இங்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக அங்கு கழிவறை - குளியலறையை பராமரிக்கும் நண்பர் தெரிவித்தார். மண்டபம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் இந்த கழிவறை - குளியலறை கட்டப்பட்டிருந்தாலும் சிறு நீர் கழிக்க ரூபாய் 5/- ம், குளிக்க ரூபாய் 10/- ம் கேட்டு வாங்கிக்கொள்கிறார். கடலில் குளித்துவிட்டு அருகில் உள்ள மற்றுமொரு நீச்சல் குளத்தில் [ குஷி பீச் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது ] மீண்டும் ஒருமுறை குளித்து மகிழ்கின்றனர். இங்கு கட்டணமாக 30/- ரூபாய் வசூலிக்கின்றனர். படகுகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்தாலும் சவாரிகள் இன்றி காணப்பட்டன. 

இங்கு சுற்றுலா வருவோர், இங்கிருந்து அடுத்தடுத்து அமைந்துள்ள சீனியப்பா கடற்கரை, பாம்பன் பாலம், பாம்பன் படகு சவாரி, இராமேஸ்வரம், தனுஸ்கோடி, அரிய வகை நீர்வாழ் உயிரினங்களை உள்ளடக்கிய அழகிய தீவுகள் மற்றும் மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தேசிய பூங்கா ஆகிய பகுதிகளை காணச்செல்ல தவறியதில்லை.












6 comments:

  1. அதிரையிலிருந்து எத்தனை மணிக்கு கார்ல கிலம்பினா சரியாக இருக்கும் ?அதே மாதிரி எத்தனை மணிக்கு ஒரு முறை பாம்பன் பாலத்தில் ரயில் கடக்கிரது.?நான் போக போறேன் அதனால் தான் கேட்டேன்...தெரிஞ்சவங்க சொல்ல லாம்...

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    அருமையான டூர் போல தெரியுது?

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. என்னப்பா அநியாயமாக இருக்குது ,,, அரியமான் கடற்கரை பற்றி புகைப்படங்களால் ஓர் அறிமுகம் தருவீர் என்று நினைத்திருந்தால் , சமைப்பதையும் சாப்பிடுவதையும் விளம்பரமாக போட்டுள்ளீர்.

    விடுமுறையில் சுற்றுலா செல்ல ஒரு புதிய இடம் கிடைத்துள்ளது என்று நினைத்து வந்த என்போன்றவர்களுக்கு ஏமாற்றமே!!

    ReplyDelete
  4. நமதூர் மக்கள் கண்டு பிடிக்கும் இதுபோன்ற சுற்றுளாக்களினால் தமிழ்நாடு சுற்றுலாதுறைக்கு சுற்றுலா அறிமுக வேலைகள் குறைவுதான்.அதுசரி அனைவரும் அதிரை சமூக ஆர்வலர்கள் மாதிரி தெரியுதே புதிதா கட்சி கிட்சி ஆரம்பிக்க திட்டமா ?போகும்போது கொஞ்சம் மசூரா பண்ணி கூட்டிகிட்டு போங்கப்பா .... பாறை மீனை கீறி விட்டு பொறித்து என்னா ஒரு ஆளுக்கு ஒன்னு ஒன்னா?

    ReplyDelete
  5. இந்த கடற்கரைக்கு வார இறுதி நாட்களை கழித்திட பெருவாரியான மக்கள் வருகை தருகின்றனர்.

    அமைதியான சூழலில் மென்மையான குளிர்காற்று தவழ்ந்து வரும் இந்த கடற்கரையில் கண்ணாடி போன்று பளபளக்கும் கடல்நீரில் தினமும் குளித்து மகிழ்வோர் ஏராளம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.