இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையை கடந்து வலு குன்றிய நிலையில் மன்னார் வளைகுடாவை நோக்கி நகர்ந்தன.
இதனால், தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், டெல்டா பகுதி மாவட்டங்கள் உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை அறிவிப்பை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் அதிரையில் மிதமான தொடர் மழை பெய்துவருகிறது. வானம் மேகமூட்டத்துடன் சூழ்ந்து காணப்படுகின்றன.
தினத்தந்தி செய்தி :
வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் கடற்பகுதியில் சூறாவளிக்காற்று வீசி வருவதால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிராம்பட்டினம் அருகே கரையூர்தெரு, காந்திநகர், ஆறுமுககிட்டங்கி தெரு, தரகர் தெரு, ஏரிப்புறக்கரை, கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், கணேசபுரம் வரை உள்ள 34 மீன்பிடி கிராமங்களில் இருந்து மீனவர்கள் கடந்த 2 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.
மீன்கள் விலை உயர்வு
நேற்றும் கடற் பகுதியில் கொந்தளிப்பு இருந்ததால் மீனவர்கள் மீனவர்கள் 3–வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் இத்துறைமுகங்களில் செல்லும் நாட்டுப்படகுகள், விசைப் படகுகள் என சுமார் 4 ஆயிரம் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மீன்வரத்து குறைந்து மீன்களின் விலை உயர்ந்துள்ளது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி. .
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
This comment has been removed by the author.
ReplyDeleteஇன்று அதிகாலை முதல் அதிரையில் மிதமான தொடர் மழை பெய்துவருகிறது. வானம் மேகமூட்டத்துடன் சூழ்ந்து காணப்படுகின்றன.
ReplyDeleteஅதிரையில் மிக ரம்மியமான சூழ்நிலையாக நிகழ்வுகிறது
ReplyDeleteதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ReplyDeleteAdirai....gel....gel. Aana entha nearam super....ma
ReplyDelete