.

Pages

Friday, January 10, 2014

செக்கடி குளத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு !

கடந்த [ 07-01-2013 ] அன்று மாலை 6 மணி முதல் அதிரையின் வறண்ட குளங்களுக்கு மீண்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டதை அடுத்து நமதூர் குளங்களுக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கின்றன.

இதில் நேற்று V.K.M ஸ்டோர் அருகில் உள்ள வாய்க்கால் உடைப்பு ஏற்படும் அளவிற்கு நீர் வரத்து நேற்று நள்ளிரவில் அதிகமாக வந்தது. இதைதொடர்ந்து மரைக்கா குளத்திற்கு செல்லும் சிஎம்பி வாய்க்கால் இணைப்பில் உள்ள குழாயில் தடுப்பு வைத்து தண்ணீரின் வேகத்தை குறைத்துனர். வேகத்தை குறைத்ததை அடுத்து மரைக்கா குளத்திற்கும், தண்ணீர் முழுமையாக நிரம்பாமல் உள்ள செக்கடி குளத்திற்கு தண்ணீர் வரத்து சீராக சென்றன.

நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்து வந்த தண்ணீர் வரத்து மதியத்திற்கு பிறகு தடைபட்டது. இதனால் செக்கடி குளத்திற்கு செல்லும் தண்ணீர் தடைபட்டன. இதையடுத்து களத்தில் இறங்கிய ஏற்பாட்டாளர்கள் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள தடைகளை கண்டறிந்தனர். இதில் தொடர்ந்து சில இடங்களில் [ குறிப்பாக மாளியக்காடு, தொக்காலிக்காடு பகுதிகளில் ] மர்ம நபர்கள் சிலரால் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர். இதைதொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க முயலுகையில் இன்று அதிகாலை முதல் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகமானது.

மரைக்கா குளத்திற்கு செல்லும் சிஎம்பி வாய்க்கால் இணைப்பில் உள்ள குழாயில் பலகை வைத்து தடுத்து தண்ணீரின் வேகத்தை குறைத்துனர். இதையடுத்து அதிரை செக்கடி குளத்திற்கு இன்று அதிகாலை முதல் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.









2 comments:

  1. மர்ஹபா// டவள சுருட்டிக்கிட்டு கெளம்புங்க குளிக்க

    ReplyDelete
  2. மர்ஹபா// டவள சுருட்டிக்கிட்டு கெளம்புங்க குளிக்க

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.