.

Pages

Saturday, January 18, 2014

அதிரையில் நடைபெற்ற TNTJ ன் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் !

இந்தியாவில் வாழுகின்ற இஸ்லாமியர்களின் பின் தங்கிய நிலையை அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாக இடஒதுக்கீடு வழங்க கோரி தமிழகத்தின் முக்கிய மாநகர்களில் எதிர் வரும் ஜனவரி 28ல் நடைபெற இருக்கிற சிறை செல்லும் போராட்டத்தின் அவசியம் குறித்து விளக்கும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் இன்று மாலை 6.30 மணியளவில் நமதூர் தக்வா பள்ளி அருகில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்ட கோவை. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் சிறை நிரப்பும் போராட்டம் ஏன் ? என்ற தலைப்பிலும், சையது இப்ராஹிம் அவர்கள் அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி ! என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

முன்னதாக கூட்டத்திற்கு தலைமை வகித்த அதிரை நகர கிளை செயலாளர் Y. அன்வர் அலி அவர்கள் 'இறையச்சம்' என்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
1. நீதிபதி ரெங்கராஜ் மிஸ்ரா, சச்சார் கமிசன் ஆய்வு அறிக்கைகளை அமல்படுத்தாமல் தொடர்ந்து காலதாமதப்படுத்திவரும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசை இந்த பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

2. தேர்தலின் போது இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு இஸ்லாமியர்களின் ஓட்டுகளை பெற்று வெற்றிபெற்ற பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கபட நாடகமாடும் அரசியல் கட்சிகளை இந்த பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

3.  ஆட்சிக்கு வந்தால் 3.5 சதவித இடஒதுக்கீட்டை உயர்த்தி தருவோம் என தமிழக முதல்வர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார். இதன்படி இவற்றை காலதாமதப்படுத்தாமல் நிறைவேற்றி தர வேண்டும் என இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

4. எதிர் வரும் ஜனவரி 28ல் இடஒதுக்கீடு வழங்க கோரி திருச்சியில் நடைபெற உள்ள சிறை செல்லும் போராட்டத்தில் அதிரையில் உள்ள அனைத்து ஜமாத்தார்களும், அனைத்து பொதுமக்களும் பெரும் திரளாக கலந்துகொள்ள இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

5. அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மீது போடப்பட்ட பொய் வழக்குகளுக்கு இந்த பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

6. அதிரை தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக கடந்த இரண்டு பொதுக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் அதிரை பேருந்து நிலையம் - பழைய போஸ்ட்ஆபிஸ் ரோடு, கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை சாலை பணிகளை துவக்கிய பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பொறுப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு வாகன வசதியும், அவர்கள் அமர்வதற்கு தனி இட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த பொதுக்கூட்டதிற்கு போலீசார் பாதுகாப்பு பணிகளை வழங்கினார்கள்.

கூட்டத்தின் இறுதியில் அதிரை நகர இணைச்செயலாளர் சுலைமான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.












9 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. எதிர் வரும் ஜனவரி 28ல் நடைபெற இருக்கிற சிறை செல்லும் போராட்டத்தில் அவசியம் கலந்துகொள்ளவேண்டும்

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அழைக்கும்(வர்ஹ்)...

    கலந்துகிட்டு???? அனைவரும் முஸ்லிம் என்று சொல்லிட்டு அப்பறம் இவன் காப்பீர் அவன் காப்பீர் என்று சொல்லுவீங்க..

    ReplyDelete
  4. இஸ்லாமியர்களின் தற்போதைய நிலைகள் பற்றி சகோ .ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் பேச்சு மிகவும் அருமை 200 கோடிக்கு வரிகட்டாத சச்சினுக்கு பாரத ரத்னா விருது.800 ஆண்டுகள் முன்மாதிரி ஆட்சி செய்த முகல் மன்னர்களுக்கு கொள்ளையர்கள் பட்டம்.

    ReplyDelete
  5. இன்ஷா அல்லாஹ் !நாங்களும் எங்கள் குடும்பமும் தயாராகவே இருக்கிரோம் ஜனவரி 28ல் சிறை செல்லும் போராட்டத்துக்கு மற்றவர்களையும் அழைப்போம்

    ReplyDelete
  6. ஜாகிர்உசேன்20 January 2014 14:39
    //நீங்கள் வீடியோவை பார்த்தீர்களா? 39-தாவது நிமிஷத்தில் அவர் சொல்லி இருப்பதை பாருங்கள்..///

    நான் இந்த வீடியோ பார்த்தேன் இதில் ரஹ்மத்துலாஹ் சொல்வது பாராளுமன்றத்தை யார் தாக்கி இருந்தாலும் தண்டிக்க படுவது சரி தான்

    இங்கு சகோதரர் நலீமிடம் கேட்கும் ஒரே கேள்வி பாராளுமன்றத்தை ஒருவர் தாக்கினால் அவரை தண்டிப்பது கூடுமா கூடாதா

    ஒருவர் என்ன சொல்கிறார் என்பதை சரியாக புரிந்து கொள்ளாமல் கருத்து சொல்லுமுன் என்ன சொல்கிறார் என்பதாவது உங்களுக்கு புரிகின்றதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்

    சொல்லுங்கள் ஒருவர் பாராளுமன்றத்தை தாக்கினால் அவரை தண்டிக்கலாமா கூடாதா ?


    Delete
    Reply
    Mohamed Naleem20 January 2014 15:30
    அஸ்ஸலாமு அழைக்கும்(வர்ஹ்)...

    ஜாகிர்உசேன்20 January 2014 14:39
    //நீங்கள் வீடியோவை பார்த்தீர்களா? 39-தாவது நிமிஷத்தில் அவர் சொல்லி இருப்பதை பாருங்கள்..///

    \\\\நான் இந்த வீடியோ பார்த்தேன் இதில் ரஹ்மத்துலாஹ் சொல்வது பாராளுமன்றத்தை யார் தாக்கி இருந்தாலும் தண்டிக்க படுவது சரி தான்

    இங்கு சகோதரர் நலீமிடம் கேட்கும் ஒரே கேள்வி பாராளுமன்றத்தை ஒருவர் தாக்கினால் அவரை தண்டிப்பது கூடுமா கூடாதா ??/////



    அருமையான கேள்வி.. நீங்கள் த.த.ஜ என்பதை நிருபித்துள்ளீர்கள்..

    பதில்: தண்டிக்கப்படவேண்டும்.

    சஹோதரருக்கு ஒரு கேள்வி??

    ரஹ்மத்துல்லாஹ் ஏன் இந்த பதிலை சொல்ல வேண்டும்??
    ரஹ்மாதுல்லாக்கு கேட்கப்பட்ட கேள்வி....

    பி.ஜே.பி சேகர்: அப்சல் குருவை தூகிக்கில் போட்டதை நீங்க
    ஒத்துக்கொள்கிறீர்களா???

    பி.ஜே ரஹ்மத்துல்லாஹ் SORRY த.த.ஜ ரஹ்மத்துல்லாஹ்:
    ஆமாம். யார் தப்பு செய்தாலும் அவர் தண்டிக்கப்படவேண்டும்..

    அவர் தப்பு செய்தார் என்பது ரஹ்மாதுல்லாஹ்கு எப்டிதெறியும்????

    பதில்????????




    ReplyDelete
    Mohamed Naleem21 January 2014 19:03
    Awaiting???????

    ReplyDelete



    Still no answer.....

    ReplyDelete
  7. இன்று அன்னை தேசத்து அகதிகள் நாம் எண்னை தேசத்தில் எரிந்து கொண்டிருக்கிறோம் !

    நாளை நமது வாரிசுகளாவது பிறந்த தேசத்தின் இயற்கை வளங்களை அனுபவித்து வாழட்டும் என்று நினைத்தால் ஜனவரி 28 அன்று திணரட்டும் தமிழகம்.

    ReplyDelete
  8. கல்வியில் பின் தங்கியுள்ள சமுதாயத்திற்கு இட ஒதுக்கீட்டை மட்டும் வாங்கி யாருக்கு பகிர்ந்தளிக்கப்போகிறார்கள்... இட ஒதுக்கீட்டு அளவுக்கு கல்வியில் நம் சமுதாயத்தில் ஆட்கள்குறைவு என கூறப்படுகிறதே!

    இட ஒதுக்கீட்டுப் பிரச்சனைக்கு போராட்டம் தேவைதான் ஆனால் அதை ஏன் சிறை நிரப்பும் போராட்டமாக அறிவிக்க வேண்டும்...? அதுவும் கல்வி பயிலும் சிறுவர்களையும் இளைஞர்களையும் சிறைச்சலையை கண்ணில் காட்டுவது நல்ல காரியாமா?

    முதலில் இந்த இளைஞர்கள் கல்வியில் முன்னேறும் வழியை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். நம் சமுதாயம் ஒன்று சேர்ந்தாலே போதும் இட ஒதுக்கீட்டை பெற்றுவிடலாம்.

    ReplyDelete
  9. Mohamed Naleem19 January 2014 18:59
    நீங்கள் வீடியோவை பார்த்தீர்களா? 39-தாவது நிமிஷத்தில் அவர் சொல்லி இருப்பதை பாருங்கள்..///

    என்ன காக்க வீடியோவை பார்த்தீங்களா?- பதில் இல்லை??????

    இது வரை நான் கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை...
    இன்னும் ஒரு கேள்வி??

    நீங்கள் அ.தி.மு.க- க்கு இதுவரை சாதகமாக பேசியதே இல்லை??

    நீங்கள் பேசுரதிளிருந்தே தெரிகிறது உண்மையை மறைகிண்றீர்கள் என்று.. வீடியோவை பார்த்துவிட்டு நீங்கள் அமைதியாக இருபதற்கு காரணம் என்ன?? பதில் தரவேண்டியது தானே?? நீங்கள் ஏன் வீடியோவை பார்த்ததை முலுங்குரீர்கள்??
    நீங்கள் உளறுவது மக்களுக்கு இப்போது தெளிவாக புரிகிறது..



    Mohamed Naleem13 January 2014 13:52

    உதாரணம்:
    போலீஸ் வேலைக்கு முஸ்லிம்கள் சென்றால்? சலுட் அடிக்க வேண்டும்.. சலுட் அடிப்பது சிர்க் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
    தெளிவாக விளக்கவும் சகோதரா... ????? please answer also this qus..?????????????????????????????????????????????????????


    என்ன காக்கா??? பதில் எங்க???
    மக்கள் நாம பேசுறத பாத்துக்கிட்டுதான் இருக்காங்க.. AWAITING...

    ReplyDelete
    Repliesஜாகிர்உசேன்20 January 2014 14:39
    //நீங்கள் வீடியோவை பார்த்தீர்களா? 39-தாவது நிமிஷத்தில் அவர் சொல்லி இருப்பதை பாருங்கள்..///

    நான் இந்த வீடியோ பார்த்தேன் இதில் ரஹ்மத்துலாஹ் சொல்வது பாராளுமன்றத்தை யார் தாக்கி இருந்தாலும் தண்டிக்க படுவது சரி தான்

    இங்கு சகோதரர் நலீமிடம் கேட்கும் ஒரே கேள்வி பாராளுமன்றத்தை ஒருவர் தாக்கினால் அவரை தண்டிப்பது கூடுமா கூடாதா

    ஒருவர் என்ன சொல்கிறார் என்பதை சரியாக புரிந்து கொள்ளாமல் கருத்து சொல்லுமுன் என்ன சொல்கிறார் என்பதாவது உங்களுக்கு புரிகின்றதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்

    சொல்லுங்கள் ஒருவர் பாராளுமன்றத்தை தாக்கினால் அவரை தண்டிக்கலாமா கூடாதா ?


    Delete
    Reply
    Mohamed Naleem20 January 2014 15:30
    அஸ்ஸலாமு அழைக்கும்(வர்ஹ்)...

    ஜாகிர்உசேன்20 January 2014 14:39
    //நீங்கள் வீடியோவை பார்த்தீர்களா? 39-தாவது நிமிஷத்தில் அவர் சொல்லி இருப்பதை பாருங்கள்..///

    \\\\நான் இந்த வீடியோ பார்த்தேன் இதில் ரஹ்மத்துலாஹ் சொல்வது பாராளுமன்றத்தை யார் தாக்கி இருந்தாலும் தண்டிக்க படுவது சரி தான்

    இங்கு சகோதரர் நலீமிடம் கேட்கும் ஒரே கேள்வி பாராளுமன்றத்தை ஒருவர் தாக்கினால் அவரை தண்டிப்பது கூடுமா கூடாதா ??/////



    அருமையான கேள்வி.. நீங்கள் த.த.ஜ என்பதை நிருபித்துள்ளீர்கள்..

    பதில்: தண்டிக்கப்படவேண்டும்.

    சஹோதரருக்கு ஒரு கேள்வி??

    ரஹ்மத்துல்லாஹ் ஏன் இந்த பதிலை சொல்ல வேண்டும்??
    ரஹ்மாதுல்லாக்கு கேட்கப்பட்ட கேள்வி....

    பி.ஜே.பி சேகர்: அப்சல் குருவை தூகிக்கில் போட்டதை நீங்க
    ஒத்துக்கொள்கிறீர்களா???

    பி.ஜே ரஹ்மத்துல்லாஹ் SORRY த.த.ஜ ரஹ்மத்துல்லாஹ்:
    ஆமாம். யார் தப்பு செய்தாலும் அவர் தண்டிக்கப்படவேண்டும்..

    அவர் தப்பு செய்தார் என்பது ரஹ்மாதுல்லாஹ்கு எப்டிதெறியும்????

    பதில்????????




    ReplyDelete
    Mohamed Naleem21 January 2014 19:03
    Awaiting???????

    ReplyDelete


    இன்னும் பதில் கானம்???? எங்க ஓடுநீங்க ஜாகிர் மற்றும் அஷ்ரப்???? உண்மையை மக்கள் பார்துகொண்டிருகிறார்கள்.. அல்லாஹ்வும் பார்துகொன்டிருகிறான்..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.